ஏறாவூர் சுற்றுலா தகவல் மையம் சமூகச்சீரழிவை ஏற்படுத்தும்

0
234

FB_IMG_1502989564588அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது. ஏரூர் பொருளாதாரத்துக்கான கதையல்ல. ஏரூர் எதிர்காலத்திற்கான கதை.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களை அறிந்து கொள்ளும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் இந்த சுற்றலா தகவல் மையம் அமைக்கப்படவுள்ளது.

இந்த மையத்தின் மூலம் சுற்றுலாத்துறையூடாக கிராமிய பொருளாதாரத்தினை வளர்க்கும் வகையில் செயற்படவுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது. ஊர் வளர்ச்சி என்ற நோக்கில் சரியானதாகக் காணப்படும் சகோதரர்களே, இதனால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் பற்றிச்சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது.

இவ்வாறான மையமொன்று கெளரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களால் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டதாக படித்த ஞாபகம். ஏற்கனவே சுற்றுலாத்துறை பிரபலமான இடங்களில் திறந்தது வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏறாவூரில் சுற்றுலாதுறை இன்னும் காலடியெடுத்து வைக்கவில்லை. அது நடந்தால், நமது முஸ்லிம் கலாசாரத்தை சூறையாடி விடுமென்பது அப்பட்டமான உண்மை.

ஆற்றங்கரையில் குளிக்க வாய்ப்பில்லை என்று கூறுவது பிழையான கருத்து. ஏனெனில், தற்போது முடியாத போனாலும், எதிர்காலத்தில் சாத்தியமாகலாம். குப்பை மேடு சுற்றுலாத்துறை மையமாக மாறும் போது, அது நடக்காதா? அரசியல் மாற்றம் நடைபெறும். இது நியதி அப்போது அதை மாற்றுவோம் என்றால் எல்லாம் முடிந்தது.

சமூகச்சீர்கேடுகளுக்கு வழியமைப்பதற்கு இடம் கொடுத்ததற்கு தூரநோக்கோடு சிந்திக்க வில்லையா? நமது ஏறாவூர் உலமா சபை?  நீங்கள் சுற்றுலாத்துறை மையம் கட்டுவது பிழையென்று சொல்லவில்லை. கட்டவிருக்கின்ற இடத்தால் நடக்கும் விபரீதங்களைச் சிந்தியுங்கள்.

எதிர்கால இளைஞர்களை மற்றும் கலாசாரத்தைக் கருத்திற்கொள்ளுங்கள்

தொடரும்…..
தகவல். ஏறாவூரிலிருந்து இஹ்கான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here