அலியார் ஹஸரத்தின் மறைவு முழு நாட்டுக்கும் பேரிழப்பாகும்-பிரதியமைச்சர் அமீர் அலி

0
251

DSCN9649வாழைச்சேனை எஸ்.எம்.எம்.முர்ஷித்

சம்மாந்துறையைச் சேர்ந்த மூத்த உலமா அலியார் ஹஸரத்தின் மறைவுக்கு எனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

இன்று (19.08.2017) சனிக்கிழமை வபாத்தான இலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவரும், சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரியின் ஸ்தாபகருமான ஷேகுத் தப்லீக் அலியார் ஹஸரத்தின் மறைவுக்கு பிரதியமைச்சர் அமீர் அலி விடுத்துள்ள அனுதாபச்செய்திலயே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் தொடர்ந்து கருத்துத்தெரித்துள்ளதாவது,

அலியார் ஹஸரத்தின் மறைவு இலங்கை முஸ்லீம்களுக்கு மாத்திரமல்ல. நாட்டிலுள்ள அனைவருக்கும் பேரிழப்பாகும். ஹஸரத் என எல்லோராலும் கண்ணியமாக அழைக்கப்பட்ட அலியார் ஹஸரத் “மிக நீண்ட காலமாக மார்க்கப்பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். முஸ்லிம் சமூகத்துக்காக அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ள ஹஸரத்தின் மறைவுச்செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தேன்.

சம்மாந்துறை மண்ணை சமூக ரீதியாகவும் சன்மார்க்க ரீதியாகவும் தலை நிமிரச்செய்ததில் அலியார் ஹஸரத்துக்கு பெரும் பங்குள்ளது. குறிப்பாக, தப்லீக் ஜமாஅத்தின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கிழக்கு மாகாணத்தில் தப்லீக் ஜமாஅத் வளர்ச்சியடைய பெரும்பாடுபட்ட ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லையென்றே நினைக்கிறேன்.

அவரது இழப்பால் கவலையடைந்திருக்கும் அவரது குடும்பத்தினர், தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, எல்லாம் வல்ல இறைவன் அவரின் பாவங்களை மன்னித்து, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக எனப்பிராத்திக்கின்றேன் என பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here