காத்தான்குடி அபிவிருத்திக்கு அமைச்சர் றவூப் ஹக்கீம் நிதியொதுக்கீடு

0
256

2560x1440-white-solid-color-backgroundஆதிப் அஹமத்

நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்கள் காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்கு மூன்று கோடி எண்பத்து ஏழு இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செய்துள்ளதாக நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச்செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் தெரிவித்தார்.

தானும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கும் இணைந்து விடுத்த வேண்டுகோளின் பேரில், 2017ம் ஆண்டுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களாக மேற்படி திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென முபீன் அவர்கள் தெரிவித்தார்.

அந்த அடிப்படையில் புதிய காத்தான்குடி வெள்ளத்தடுப்பு நடவடிக்கையாக புதிய காத்தான்குடி முஹைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் வீதியின் இருமருங்கிலும் 500 மீட்டர் நீளத்துக்கு வடிகான் அமைப்பதற்காக ரூபா ஒரு கோடி எண்பத்து ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரமும், புதிய காத்தான்குடி வைத்தியசாலை சதுக்கத்தில் அமைக்கப்படவுள்ள வடிகான்களுக்கு  ரூபா தொண்ணூற்றி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள காத்தான்குடி நகர சபை சிறுவர் பூங்காவை நவீன மயப்படுத்த ரூபா ஒரு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காத்தான்குடியின் நகர சபைத்தலைவராக தான் இருந்த போது, இப்பூங்கா அமைக்கப்பட்டதாகவும், அது இன்றைய தேவைகளுக்கேற்ப நவீனமயப்படுத்தப்படவுள்ளதாகவும், இப்பூங்காவை நவீன மயப்படுத்துவதில் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை தொடர்ந்து அக்கறை எடுத்து வந்ததாகவும் முபீன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here