புலமைப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அறிவு மட்டம் மேலோங்க சிறந்த முறையில் பரீட்சைகளில் கவனஞ்செலுத்த வேண்டும்-பிரதியமைச்சர்் அமீர அலி

0
215

IMG_20170819_213024வாழைச்சேனை எஸ்.எம்.எம்.முர்ஷித்

நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற வேண்டுமென வாழ்த்துவதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரீட்சை தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துசெய்திலயே அவர் மெற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

 அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது

 தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் தமது அறிவு மட்டத்தை மேலோங்கும் வகையில் சிறந்த முறையில் பரீட்சைகளில் கவனஞ்செலுத்த வேண்டும்.

குறிப்பாக, கிழக்கு மாகாணம் கல்வியில் பின் தங்கிய மாகாணமாகக் காணப்படுகின்றது.

அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், மாணவர்களும் தங்களுடைய அடைவு மட்டத்தை அதிகரிக்க திறமையாக பரீட்சை எழுத வேண்டும்.

எனவே, தாங்கள் எவ்வித இடையூறும்மின்றி சிறந்த முறையில் பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேற்றைப் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவணைப் பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here