முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலின் ஏற்பாட்டில் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கல்

0
279

முக்தார் அஹ்மத்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சருமான கெளரவ றிஷாத் பதியுத்தீன் அவர்களின் ஆலோசனைக்கமைவாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய கெளரவ ஏ.எம்.ஜெமீல் அவர்களினால் ஆயிரம் வறிய மக்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஆயிரம் மூக்குக்கண்ணாடிகள் வழங்கல் திட்டத்திற்கமைவாக, இச்செயற்றிட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடரில் இரண்டாவது கட்டமாக நேற்று 19.08.2017ம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது மக்களுக்காக 250 மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைக்கப்பட்டன.20170819_165734 FB_IMG_1503154166383 FB_IMG_1503154171567 FB_IMG_1503154183652 FB_IMG_1503154191858 IMG-20170819-WA0066

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here