ஹென்றி மகேந்திரனின் விருப்பமே சாய்ந்தமருது மக்களின் முடிவா?

0
251

kalmunai-municipal-councilஅஹமட் மன்சில்
கல்முனை மாநகர சபை சாய்ந்தமருதுக்காக கூறுபோடப்படுமானால், எதிர்காலத்தில் ஹென்றி மகேந்திரன் போன்ற கடும் தீவிரப்போக்குடைய தமிழர் ஒருவர் மேயர் ஆசனத்தில் அமர்வதனைத்தடுக்க முடியாது போய் விடும். இது பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசித்து வரும் கல்முனை மாநகர சபை மீது எழுதப்படப்போகும் அடிமைச்சாசனமாகும்.

இன்று கருணா அம்மான் முஸ்லிம்களுக்கெதிரான விசமப்பிரசாரங்களை அரங்கேற்றி வரும் இந்தச்சூழ்நிலையில், ஹென்றி மகேந்திரன் மேயர் நிஸாம் காரியப்பர் வைத்த கல்வெட்டை உடைத்த வடு மாறாத தருணத்தில் இதமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கான ஒரு இஞ்சி நிலத்தையேனும் ஈழத்தில் இழக்க முடியாத இதே சூழ்நிலையில் நம்மை நாமே தாரை வார்த்துக்கொடுக்கும் நிகழ்வே கல்முனை மாநகரிலிருந்து சாய்ந்தமருதைப் பிரிப்பதற்குண்டான முயற்சியாகும்.

அவ்வாறு தான் மாநகரம் கூறு போடப்பட வேண்டுமாயின் ஒன்றாகவன்றி நான்காக கூறு போடப்படுவதே எமது பிரதேச தமிழ், முஸ்லிம் உறவு தொடர்ந்தும் நீடித்து நிலைக்க உதவும். தலைவர் ஹக்கீமின் ஆதரவாளர்கள் இது தொடர்பில் பெரிதாக அலட்டிக் கொள்வதனைப் பார்க்கையில் வலுப்பெற்றிருந்த ஹக்கீம் சம்பந்தன் உறவை இன்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. டயஸ்போராக்களுக்கு ஹக்கீம் துணை போய்விட்டாரா? எனும் கேள்வியையும் எழுப்ப வேண்டிக் கிடக்கிறது.

மாறாக, தலைவர் றிசாட் இந்த விடயத்துக்கு துணை போயிருப்பின், ஏற்கனவே இவர் சந்தித்த தமிழ் டயஸ்போராக்களின் செயற்றிட்டத்தினை அரங்கேற்றிக் கொடுக்கும் ஒரு முயற்சியாகவும், இதற்காக தமிழ் டயஸ்போராக்கள் அவரை விலைக்கு வாங்கியிருக்கவோ கூடும். காரணம் அவர் இலகுவில் விலை போகக்கூடியவர்.

அன்று ஹென்றி மகேந்திரன்  ” கல்முனை மாநகர் ஒரு போதும் நான்காகப் பிரிக்கப்பட முடியாது. சாய்ந்தமருது வேண்டுமானால் பிரியலாம்” என்று கூறிய விடயம் தான் சாய்ந்தமருது மக்களின் விருப்பமென்றால் எமது முஸ்லிம் சமூகத்தின் தலையெழுத்தை யாராலும் மாற்ற முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here