உள்ளூராட்சி எல்லைப்பிரிப்பில் முஸ்லிம்களுக்கு அநீதி

0
94

IMG_1433முஸ்லிம் சமூகம் தங்களது தலைவலி நிவாரணத்துக்கு கொண்டு வந்த மருந்தால் முண்டமாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உள்ளூராட்சி எல்லைப்பிரிப்பு விவகாரத்திலிருந்து அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளதாக பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பாஸ் நபுகான் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் இராஜாங்க அமைச்சர் பௌசி தலைமையில் கூடிய முஸ்லிம் குழுவானது உள்ளூராட்சி எல்லைப்பிரிப்பு விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளதாகக்கூறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கலந்துரையாடும் முடிவை எடுத்துள்ளது.

எங்களது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி எல்லைப்பிரிப்பானது, எங்களுடைய நலனைக்கருத்திற் கொண்டு பிரிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டியே குறித்த எல்லைப்பிரிப்பை தற்போதைய ஆட்சியாளர்கள் முன்னெடுத்தார்கள். எங்கள் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளதென்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இது விடயத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என நாங்கள் கூறினால், இவ்வாட்சிக்கெதிராக வீண் பழி சுமத்துகிறோம் எனக்கூறலாம். இப்போது சு.க முஸ்லிம் அமைச்சர்களே இது முஸ்லிம்களுக்குப் பாதகமானதெனக் கூறுகின்றனர். இவ்வரசின் உண்மை முகத்தை அறிய இதனை விட என்ன சான்று வேண்டும். முஸ்லிம்களை வைத்து இன்னும் உள்ளூராட்சி மன்றங்களின் காலங்களை இழத்தடிப்புச் செய்ய இவ்வரசு ஏதேனும் திட்டங்களை தீட்டுகிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது.

எமது ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களின் பள்ளிகள் மீது கல் வீசும் சம்பவங்கள் போன்றவைகள் தான் இடம்பெற்றன. இவ்வாட்சியில் முஸ்லிம்கள் பரம்பரை பரம்பரையாக பாதிக்கவல்ல விடயங்களை இவ்வரசு செய்து வருகிறது. முஸ்லிம்கள் தலையிடிக்கு மருந்து தேடிச்சென்று முண்டமாக நிற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here