ஏறாவூர் சுற்றுலா தகவல் மையத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு

0
192

முதலமைச்சரின் ஊடகப்பிரிவு

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியினால் நிர்மாணிக்கப்படவுள்ள  ஏறாவூர் சுற்றுலா தகவல் மையத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 20.08.2015ம் திகதியன்று இடம்பெற்றது.

இதன் போது, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம், சுகாதாரப் பிரதியமைச்சர் பைசல் காசிம் மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், விவசாயத்துறை அமைச்சர் க.துரைராஜசிங்கம், மாகாண சபைத்தவிசாளர் சந்திரதாச கலப்பத்தி உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் இந்நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

அத்துடன், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியக அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. இச்சுற்றுலாத்துறைப்  பணியகம் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 12O 13O 14O 15O

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here