இறக்காம இளைஞர்கள் ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான முகாம்

0
208

இறக்காமத்தான் முவைஸ்

“உதிரம் கொடுத்து, உயிர் காப்போம்” எனும் கருப்பொருளில் இறக்காமம் இளைஞர்கள் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான நிகழ்வு கடந்த 20.08.2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறக்காமாம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இறக்காமம் அனைத்துப் பள்ளிவாசல்கள், தன்னார்வத் தொண்டர் அமைப்புக்கள், இளைஞர் கழகங்கள் என்பவற்றின் ஒத்துழைப்புடன் மூவின மக்கள் வாழும் இப்பிரதேசத்தில் முதற்தடவையாக அம்பாரை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிக்கிளைக்கு குருதி நன்கொடை வழங்கும் நோக்குடன் இறக்காமம் இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த இரத்த தான நிகழ்வில் நூற்றுக்கமதிகமான இளைஞர்களும், யுவதிகளும், தாய்மார்களும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். இங்கு பெற்றுக்கொள்ளப்பட்ட குருதிகள் யாவும் அம்பாறை மாவட்ட வைத்தியசாலையின் குருதி வங்கிக்கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.20170820_113345 20170820_123500 IMG_20170820_103801 IMG_20170820_161438-2 IMG_20170820_170739-1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here