சாய்ந்தமருது தனி உள்ளூராட்சி மன்றத்துக்கு கல்முனைச்சமூகம் முட்டுக்கட்டை?

0
280

sainthamaruthu(அகமட் லெப்பை ஜஹான்)
சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை கிடைப்பதற்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில், அதனைக் குழப்பியடித்து அந்தச் சபையை இல்லாமலாக்கும் முயற்சியில் கல்முனை படித்தவர்களும் பள்ளிவாசல் சம்மேளனும் வர்த்தக சமூகத்தினரும் ஈடுபடுவது மிகவும் வேதனையானது.

சாய்ந்தமருது மக்கள் தமக்கென ஒரு சுயாட்சியைக் கோரியதில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. காலா காலமாக கல்முனை சமூகத்தால் சாய்ந்தமருது மக்கள் நசுக்கப்பட்டதும், அவர்களை கிள்ளுக்கீரைகளாக நினைத்து கல்முனை உள்ளூராட்சி அதிகாரங்கள் நடாத்தியமையும் இக்கோரிக்கையை எழுவதற்குக் காரணம். சாய்ந்தமருதுக் குப்பைகளை அகற்ற வக்கில்லாத கல்முனை மாநகர சபை தற்போது ஒற்றுமை பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கின்றது.

கல்முனை மாநகர சபைக்குச்சொந்தமான சந்தையில் ஒரு தேநீர்க்கடையைக்கூட வைப்பதற்கு அனுமதி வழங்காத கல்முனைச்சமூகம் சாய்ந்தமருது மக்கள் பிரிந்து போக நினைக்கும் போது, ஒற்றுமை பற்றிப்பேசுவது வேடிக்கையானது.

சாய்ந்தமருது மக்கள் பிரிந்து போகும் முடிவை மேற்கொண்டமைக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  தனது தலைமைப்பதவியைத் தக்க வைப்பதற்காக மாநகர சபையில் தனது சித்து விளையாட்டை ஆரம்பித்து, தனது தலைமைக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலை கெட்டித்தனமாக இல்லாமல் செய்தார்.

இதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தியது. கல்முனையிலுள்ளவர்களைத் திருப்திப்படுத்திய அதே வேளை, தனது தலைமைப்பதவிக்கு காரியப்பரால் வந்த அச்சுறுத்ததலை நீக்கினார். கல்முனை என்ற குறுகிய வட்டத்துக்குள் நிஸாம் காரியப்பரை அவர் முடக்கினார்.

இந்நிலையில், சாய்ந்தமருது மக்கள் தனி சபை கேட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். சாய்ந்தமருதின் சில அரசியல்வாதிகள் முன்னாள் உள்ளூராட்சி  மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லாவை நம்பி அவருக்கு தமது ஆதரவைத் தெரிவித்த போதும், அதாவுல்லா இயதசுத்தியுடன் இந்தக்கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதில் இழுத்தடிப்புச் செய்ததால் சாய்ந்தமருது மக்கள் ஏமாற்றப்பட்டனர்.

சாய்ந்தமருதில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் எழுச்சி குறிப்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் உட்பட சாய்ந்தமருதின் முன்னாள் மு.கா முக்கியஸ்தர்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கரத்தைப் பலப்படுத்தியதன் விளைவினாலேயே சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை மலர்வதற்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.

மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன், பிரதித்தலைவர் எம்.ஏ.எம்.ஜெமீல் ஆகியோரின் இடையறா முயற்சியினாலும், அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் பைசர் முஸ்தபாக்குமான நெருக்கமான உறவினாலுமே இப்புதிய சபை கணிந்துள்ளது.

அமைச்சர் பைசர் முஸ்தபா அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் இணைந்து  சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் கடந்த 21.10.2016 இல் பிரதித்தலைவர் ஜெமீலினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு, பிரதித் தலைவரின் அழைப்பையேற்று சாய்ந்தமருதுக்கு வந்து அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அவரது உரையிலேயே  பகிரங்க உறுதி கொடுத்தார்.

இது இப்படியிருக்க  மு.கா வினர் இந்த உள்ளூராட்சி சபை விவகாரத்தில் பாம்புக்கு தலையையும்  மீனுக்கு வாலையும் காட்டும் விலாங்குகளாக நடந்தனர்.

சாய்ந்தமருதைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு கதை கல்முனைச் சேர்ந்தவர்களுக்கு இன்னொரு கதை கூறிய மு.கா தலைவர் இன்று ஆப்பிழுத்த குரங்காக மாறியுள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை கல்முனை சந்தாங்கேணி மைதானத்துக்கு கொண்டு வந்து, சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்குவேன் என ரணிலின் வாயால் கூற வைத்தவர் ஹக்கீமே. தேர்தலுக்காக அவர் இவ்வாறு நடந்து கொண்டதனால், பின்னர் இதனைக்கிடப்பில் போட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், மு.கா கூட்டத்தில் ரணில் இவ்வாறு கூறிய போது, மு.கா.குஞ்சுகள் விசிலடித்து கை தட்டினர். இதில் கல்முனையைச் சேர்ந்தவர்களும் அடக்கம்.

இத்தனை நடந்த பிறகு சும்மா இருந்த கல்முனைச் சமூககத்தைச்சேர்நத சில மேதாவிகள் இறுதி நேரத்தில் இதனைக்குழப்பியடிக்க ஏன் முயல்கின்றனர்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here