துருக்கராகம முஸ்லிம் வித்தியாலய வகுப்பறைப் பற்றாக்குறைக்கு இஷாக் ரஹுமான் எம்பி தீர்வு

0
199

அஸீம் கிலாப்தீன்

அநுராதபுர மாவட்டத்தின் ஹொரவபொதான தேர்தல் தொகுதியில், கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட துருக்கராகம கிராமத்தில் 10.07.1951 இல் ஆரம்பிக்கப்பட்ட 650 மாணவர்களைக்கொண்ட துருக்கராகம முஸ்லிம் வித்தியாலயத்தின் மிக நீண்ட காலமாக  முக்கிய பிரச்சினையாகக் காணப்பட்ட வகுப்பறைப் பற்றாக்குறைக்கான தீர்வு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் முயற்சியின் பலனாக குவைட் நாட்டின் தனவந்தர் ஒருவரினால் அல் ஹிமா சமூக சேவைகள் நிறுவனத்தின் மூலம் துருக்கராகம முஸ்லிம் வித்தியாலயத்திற்கு 02 மாடிக்கட்டடம் (25×90)  நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் நேற்று 21.08.2017ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், அல்-ஹிமா சமூக சேவைகள் நிறுவனத்தின் செயலாளர் M.A.A. நூருல்லாஹ், A.R.M.Travels உரிமையாளர்  A.R.M. தாரிக் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் உட்பட பெற்றார்கள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.20914640_1996997240519046_1874618905417311118_n 20915103_1996997290519041_5746563788140718576_n 20915487_1996995533852550_5670550182520340703_n 20953579_1996996630519107_5286273999130431473_n IMG_9663 IMG_9670

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here