மீராவோடைக் காணிப்பிரச்சினை தொடர்பில் பிரதியமைச்சர் அமீர் அலி, எஸ்.யோகேஸ்வரன் எம்பியின் கருத்துக்கள் பிழையானது-சாட்டோ வை.எல்.மன்சூர்

0
305

cover pictureஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
கல்குடா, வாழைச்சேனை, ஓட்டமாவடி–மீராவோடையிலுள்ள சக்தி வித்தியாலய மைதானக்காணி குறித்த பாடசாலைக்குச் சொந்தமானது எனக்கூறப்படுகின்ற பிரச்சனை தொடர்பாக அரசியல் மற்றும் நிருவாக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட  உயர்மட்டக் கலந்துரையாடல் கடந்த 19.08.2017ம் திகதி சனிக்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர்களின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த உயர்மட்டக்குழு கலந்து கொண்ட கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களையும், கருத்துக்களையும் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ள அதே நேரத்தில், அவ்வாறான கருத்துக்கள் அனைத்தும் ஆதாரபூர்வமற்றதாகவும் உண்மைக்குப் புறம்பானாதாகவும் உள்ளது என நாபீர் பெளண்டேசனின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரியும், கல்குடாத்தொகுதி அமைப்பாளரும், முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் கல்குடாத்தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும், சமூக ஆர்வலருமான சாட்டோ வை.எல்.மன்சூர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு குறித்த உயர்மட்டக்குழு கலந்து கொண்ட கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களையும், கருத்துக்களையும் எதற்காக ஏற்றுக்கொள்ள முடியாதென்பது சம்பந்தமாக சாட்டோ வை.எல்.மன்சூர் தெரிவித்த ஆதாரபூர்வமான கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ – கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பிழையானது:- 
www.youtube.com/watch?v=67p9-m0h9O8&feature=youtu.be

20 22 23 24 25 cover picture

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here