பணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை முற்றாக இல்லாதொழிக்கும் முதலமைச்சரின் திட்டத்தில் ஏறாவூரில் ஆடை, நெசவுத்தொழிற்சாலை திறந்து வைப்பு

0
246

616A9062முதலமைச்சரின் ஊடகப்பிரிவு
பெண்களை வௌிநாட்டுக்கு அனுப்பக்கூடாது என்ற கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கொள்கையை வலுப்படுத்தும்  விதமான ஆடைத்தொழிற்சாலைகள் நிறுவும் திட்டத்திற்கமையை கடந்த சனிக்கிழமை ஏறாவூர் நகரில் ஆடைத்தொழிற்சாலையொன்றும் நெசவுத்தொழிற்சாலையொன்றும் திறந்து வைக்கப்பட்டன.

இன, மத பாகுபாடின்றி தமிழ், முஸ்லிம் யுவதிகள் இந்த ஆடைத்தொழிற்சாலைகளில் பணி புரிகின்றனர். குறித்த ஆடைத் தொழிற்சாலையினை ஐக்கிய அரபு இராச்சியத்தைச்சேர்ந்த தனவந்தரான அஷ்ஷெய்க் லூர்த்தாவின் புதல்வர்கள் திறந்து வைத்தனர்.
கிழக்கிலுள்ள பெண்கள் வௌிநாடுகளுக்குச் சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுப்பதைக்கண்டு அதற்கு மாற்று வழியாக கிழக்கு மாகாணத்திலேயே அவர்களுக்கு தொழில்வாய்யபுக்களை வழங்கும் விதமாக கிழக்கு மாகாண முதலமைச்சரால் ஆடைத்தொழிற்சாலைகள் நிறுவும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனடிப்படையில், ஏறாவூரில் ஏற்கனவே ஆடைத்தொழிற்சாலையொன்று நிறுவப்பட்ட நிலையில், சம்மாந்துறை மற்றும் சம்பூர் சீதனவௌியிலும் ஆடைத்தொழிற்சாலைகள் நிர்மாணி்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே  ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் கைகோர்த்து இந்த ஆடைத்தொழிற்சாலைகளை நிறுவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 616A9062 616A9068 616A9084 616A9114 DSC_5415

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here