பிரதமா், ஜனாதிபதி அறிவுறுத்தலின் பேரில்  அமைச்சா் மனோ நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 3 பிரதேச சபைகளுக்கான கோவை அமைச்சா் பைசாிடம் கையளிப்பு.

0
212

(அஷ்ரப் ஏ சமத்)

maகடந்த திங்கட் கிழமை கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் 3 பிரதேச சபைகள் மேலதிகமாக அமைத்து தரும் படி முற்போக்கு முன்னணி கோரி்க்கை விடுத்தும் இதுவரை அரசாங்கம் கவணத்தில் எடுக்க வில்லை என தெரிவித்து கட்சித் தலைவா் கூட்டத்தில் எழுந்து சென்று தனது எதிா்ப்பை தெரிவித்தாா்.

இன்று அமைச்சா் பைசா் முஸ்தாபவை சந்தித்த   தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி கிடைத்துள்ளாதாக அமைச்சா் மனோ கனேசன் தெரிவித்தாா்  அவா் மேலும் தெரிவித்தாவது – நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற எண்ணிக்கையை கூட்டுவதற்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. சற்று முன் உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் அவரது அமைச்சில் நாம் நடத்திய சந்திப்பின் போது இதற்கான உடன்பாடு ஏற்பட்டது. இன்று காலை நாடு திரும்பி தன்னிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையை ஏற்று பிரதேச சபைகளின் எண்ணிக்கையை கூட்டும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவுறுத்தியதாக அமைச்சர் பைசர் முஸ்தபா எம்மிடம் தெரிவித்தார். இது தொடர்பான விபரக்கோவை அமைச்சரிடம் சற்று முன்னர் நாம் கையளித்தோம். எனத் தெரிவித்தா்.  இவ்  வைபவத்தில்  அமைச்சா்களான திகாம்பரம்  இராதக் கிருஸ்னன்  மற்றும் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பிணா்கள்  கட்சியின் செயலாளா்களும் கலந்து கொண்டனா்.(F)ma2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here