பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எந்தவொரு தடையுமில்லாமல் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை-அமைச்சர் ஹக்கீம்

0
259

unnamed (3)(எம்.எம்.மின்ஹாஜ்)

வரட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எந்தவொரு தடையுமில்லாமல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும், இரவு நேரங்களில் பவுசர் மூலம் குடிநீர் வழங்கவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் நகரத்திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அனுரா குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

வரட்சி நீடித்த போதிலும் எந்தவொரு தடையுமில்லாத நீர் வழங்கல் முன்னெடுக்கப்படும். குருணாகலில் மாத்திரம் சிக்கல் நிலையேற்பட்டது. நீர் வழங்களில் சீரான முகாமைத்துவத்தை முன்னெடுத்து வருகின்றோம். பவுசர் மூலம் குடிநீர் வழங்கி வருகின்றோம். 340 வவுசர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பியுள்ளோம். வடக்கு, கிழக்கு உட்பட அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் வவுசர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாகவும் பவுசர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 69 குழாய்களை புனர்நிர்மாணம் செய்து வருகின்றோம். கிணறுகளை புனர்நிர்மாணம் செய்து வருகின்றோம். 1225 குடிநீர் தாங்கி பகிரப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் முன்னெடுத்த குடிநீர் விநியோகத்தை இனி மேல் இரவு நேரங்களிலும் பவுசர்கள் மூலம் விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

ஆகவே, அரசாங்கம் என்ற வகையில் முழுமையான சேவைகளை வழங்கி வருகின்றோம். உமா ஓயா திட்டத்தினால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டன. கிணறுகளும் வற்றின. பண்டாரவளை ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டன. குறித்த பகுதிகளில் குடிநீர் வசதியில்லாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்க 250 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளோம். அத்துடன், அதிகளவிலான நீர்த்தேக்கங்களையும் அதிகரிக்க வேண்டும். இதனூடாக வெள்ள அனர்த்தங்களைக் குறைத்து கொள்ள முடியும்.

அத்துடன், மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்தை சூழவுள்ள அனைத்துப் பகுதிகளுக்கான நீர் வழங்கத்திட்டமிட்டுள்ளோம். வாழைச்சேனையில் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவவுள்ளோம். இதன்படி இவ்வருடத்திற்குள் இதற்கான பணிகளை ஆரம்பிக்க முடியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here