அட்டாளைச்சேனை அபிவிருத்திப்பெரு விழா: பிரதம அதிதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்-சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர்

0
212

17796275_950085015094083_1190898995891843264_nஅஹ்மத் சப்னி

அட்டாளைச்சேனையின் அபிவிருத்திப்பெருவிழா எதிர்வரும் 2017.08.27 காலை 09.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்திப் பாதையில் மற்றுமோர் நிகழ்வு அட்டாளைச்சேனையில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் அழைப்பினையேற்று கட்சியின் தேசியத்தலைவரும், நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் (பா.உ) அவர்களும் சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ண (பா.உ) அவர்களும், கிழக்கு மாகாண ஆளுனர் கெளரவ ரோஹித போகல்லாவ, கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ இஸட். ஏ. நசீர் அஹமட் (பொறியியலாளர்), சுகாதாரப் பிரதியமைச்சர் கௌரவ பைஷால் காஸிம் (பா.உ) ஆகியரோடு, பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உயரதிகாரிகள், கட்சிப்பிரமுகர்கள் கலந்து கொண்டு பின்வரும் அபிவிருத்திப் பணிகளை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில்;

• அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் விடுதியும், அவசர விபத்துப்பிரிவு, கேற்வேய் என்பவற்றிற்கான அடிக்கல் நடல்.
• சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய விடுதிக்கான அடிக்கல் நடல்.
• கால்நடை வைத்திய அதிகாரி காரியாலமும் சுற்று மதிலும் திறந்து வைத்தல்.
• ஷரீப் ஹாஜியார் வீதியினை ‘காபட்’ இடும் வேலைத்திட்டம் ஆரம்பிப்பு
• அஸ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி அங்குரார்ப்பணம்.
• கப்பலடி வீதிக்கு ‘காபட்’ இடும் வேலைத்திட்டம் ஆரம்பிப்பு.
• அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியாசாலையில் வைத்திய அதிகாரிகள் விடுதி திறந்து வைப்பு.
• ஆலம்குள பிரதேச அபிவிருத்தி
• பல் தேவைக்கட்டடம் திறந்து வைத்தல்.
• ஆரம்ப மருத்துவ பாராமரிப்புப்பிரிவு திறந்து வைத்தல்.

அமைச்சர் நஸீரின் சேவைகள் அடங்கிய “பதிவு” நூலும் வெளியிடப்படவுள்ளது.

எனவே, கட்சியின் அபிவிருத்திப் பெருவிழாவில் கலந்து கொள்வதோடு, அன்றைய தினம் பிற்பகல் 4.30 மணிக்கு சந்தை சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.17796275_950085015094083_1190898995891843264_n 21032313_10207963841692683_377712685981543886_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here