மலைநாட்டு தமிழர்களின் உயர்வுக்காக அயராது பாடுபட்டு உழைத்தவர் அஸீஸ் – முன்னாள் அமைச்சர் அஸ்வர்

0
187

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

azwer1மறைந்த மலையகத் தலைவர் ஏ. அஸீஸ் இன்று உயிருடன் இருந்திருந்தால் முற்போக்கு சக்திகளோடு ஒன்றிணைந்து மேற்கத்தியவாதத்திற்கும் காலணித்துவ கிடுகிடுகளுக்கும் எதிராக நிச்சயம் போராடி இருப்பார். ஏனெனில், அவருடைய வாழ்கையே முற்போக்கு சக்திகளோடு இணைந்ததாக அமைந்திருந்தது. இன்று நாட்டில் நடைபெறுகின்ற பல சர்வதேச சூழ்ச்சிகளுக்கும் சியோனிச வாதத்துக்கும் எதிராக அவர் நிச்சயம் குரல் கொடுத்திருப்பார். அவர் இல்லாத குறை எம்மை மிகவும் வாட்டுகிறது என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

அண்மையில் தெஹியோவிட்ட பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற ‘மலைச்சுடர் வாழ்வோரை வாழ்த்துவோம்’ விழாவில் உரை நிகழ்த்துகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அஷ்ரப் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மேலும் பேசிய அவர் மேலும் கூறியதாவது,
அஸீஸ் என்றும் நாட்டுப்பற்று உள்ளவராகத் திகழ்ந்தார். அவர் மலைநாட்டு தமிழர்களின் உயர்வுக்காக பல போராட்டங்களை நடத்திய முன்னணி தலைவர் என்று நாம் விபரிக்கலாம். இலங்கை – இந்திய காங்கிரஸின் முதல் தலைவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். பிறகு ஜனநாயக செயலாளர் காங்கிரஸை ஆரம்பித்தார். அவருடைய சேவைபல வழிகளிலும் எமது நாட்டில் பரந்து விரிந்து காணப்பட்டது. அவர் அகில இலங்கை கல்வி மாநாட்டில் ஆரம்ப உறுப்பினராக வந்து அதன் உபதலைவராகவும் மற்றும் முஸ்லிம்களின் கல்விக்காக பல வழிகளிலும் குரல் கொடுத்தார். அதுமட்டுமல்ல, முஸ்லிம்களுடைய உயர்வுக்காகவும் மிகவும் ஈடுபாடு கொண்டு உழைத்தார்.
எனவே அவருடைய நாமத்தில் இந்த நிகழ்வு நடைபெறுவது மிக மிக பொருத்தம். நாட்டு மக்களுக்காக பல வழிகளிலும் சேவை செய்த ஏ. அஸீஸ் எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றும் தெரிவித்தார்.(F)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here