கிழக்கு மாகாண விவசாய அமைச்சரினால் சீமேந்து பக்கற்றுகள் வழங்கி வைப்பு.

0
177

(கல்குடா செய்தியாளர்)

image-0-02-06-7fd6d6aa3676ef9e8a35261df59a4cd6684b23fce2a2ae1ccee66adfda54146a-Vகிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆலயங்களுக்கு அவற்றின் புனரமைப்பு பணிகளுக்காக சீமேந்து பக்கற்றுகள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை இன்று கிரான் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது கல்லடி வெட்டை காட்டுப் பிள்ளையார் ஆலயம், மீரான்கடவை மாவடிப்பிள்ளையார் ஆலயம், பொண்டுகள் சேனை ஈழத்து அரசடிப் பிள்ளையார் ஆலயம், குடும்பிமலை ஸ்ரீ முருகன் ஆலயம், திகிலிவெட்டை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயம் போன்றவற்றின் புனருத்தாரண வேலைப்பாடுகளுக்கான சீமேந்து பக்கற்றுகள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.

இது போன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவிற்குட்டபட்ட சுமார் 52 ஆலயங்களுக்கு அவற்றின் புனருத்தாரண வேலைகளுக்காக சீமேந்து பக்கற்றுக்கள் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(F)image-0-02-06-7fd6d6aa3676ef9e8a35261df59a4cd6684b23fce2a2ae1ccee66adfda54146a-V image-0-02-06-7681e2e0f7991fc03065035a99ca06606a0f47a3e43d0e27c110e5177ad75334-V image-0-02-06-ceddebbeed948909b1e59d293ecf4ff138f69e9e2000419ef98cb4a227934c1d-V

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here