நல்லாட்சி சிறுபான்மை மக்களின் கண்ணில் குத்திவிட்டது – நாமல் ராஜபக்ஸ

0
213

unnamedசிறுபான்மை மக்களை மிக அதிகமாக பாதிக்கவல்ல உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்மந்தமான சட்ட மூலத்துக்கு கூட்டு எதிர்க்கட்சியினரே தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி செயற்பட்டுள்ளாத பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர்..

சிறுபான்மை மக்கள் இந்த ஆட்சியினதும் எங்களினதும் உண்மை முகங்களை அறிந்துகொள்ள பல விடயங்களை இவ் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்மந்தமான சட்ட மூலமானது சிறுபான்மை மக்கள் அதிகம் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

நாங்கள் இலங்கை நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இயற்ற சிந்தனை கொண்ட சட்ட மூலத்தை இவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக பாவிப்பார்கள் என நாம் சிறிதும் நினைத்திருக்கவில்லை.

இது நிறைவேற்றப்படுகையில் ஒரு சமூகத்தின் மீதான குரோத செயற்பாடுகள் மீதான பழியை எங்கள் மீது போட்டாலும் வாய்ப்பில்லை.எங்கள் மீது சிலர் கொண்டுள்ள வெறுப்பின் காரணமாக அதனை நம்பினாலும் நம்பிவிடுவார்கள்.

இது போன்ற பல விடயங்களை கருத்தில் கொண்ட நாம் எமது அணிகளினூடாக பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தோம்.எதிர்த்து வாக்களித்திருந்தோம்.இதனை எதிர்த்து வரிந்து கட்டி நிற்க வேண்டிய முஸ்லிம் தலைகள் கூட ஓடி ஒழித்துவிட்டார்கள்.

இதனை எதிர்த்து வாக்களித்ததில் எங்களுக்கு என்ன இலாபமுள்ளது.சில பெயர் தாங்கி தலைவர்களை போல வாக்களிப்பிலிருந்தாவது தவிர்ந்திருக்கலாம்.

இவர்கள் எச் சட்ட மூலத்தை கொண்டு வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம்.

சிறுபான்மையினரால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவு அணியான கூட்டு எதிர்க்கட்சியினரே கடைசியில் அவர்களுக்கு பாதகமான சட்டமூலத்திற்கு வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.(F)

joint opposition tamil media unit

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here