மீராவோடை காணி பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க களத்தில் குதித்துள்ள ஓட்டமாவடி பிரதேச செயலகம்…

0
184

(ஓட்டமவடி அஹமட் இர்ஷாட்)

கவர் போட்டோகல்குடா பிரதேசத்தில் முக்கிய பேசும் பொருளாக மாறியுள்ள மீராவோடை சக்தி வித்தியால மைதான காணி பிரச்சனையுடன் தொடர்புபட்டுள்ள எல்லை கிராமங்களின் காணி பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக ஓட்டமாவடி பிரதேச செயலகம் களத்தில் குதித்துள்ளமையானது குறித்த பிரதேசத்தில் மீள் குடியேறியுள்ள மக்களுக்கு மன அமைதியினை கொடுக்கும் விடயமாக உள்ளது.

மேற்படி குறித்த விடயம் சம்பந்தமாக கடந்த 22.08.2017 செவ்வாய்க்கிழமை மாஞ்சோலை கிராம சேவகர் காரியாலைய கட்டத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளர் ஜனாபா சில்மியா, பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள், முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், குறித்த பிரதேசத்திற்காக கிராம சேவை உத்தியோகத்தர், மற்றும் பிரதேச வாசிகள் என பலரும் கலந்து கொண்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

மேலும் குறித்த காணி பிரச்சனை சம்பந்தமாக அரசியல் மற்றும் நிருவாக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட உயர்மட்ட கலந்துரையாடல் கடந்த 19.08.2017 சனிக்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர்களின் தலைமையில் இடம் பெற்றது.

ஆனால் அக்கூட்டத்திலோ அல்லது அதற்கு முன்னர் இடம் குறித்த காணி சம்பந்தமான கூட்டங்களுக்கோ ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கோ அல்லது பிரதேச சபைக்கோ அழைப்பு விடுக்கப்படாமலே கூட்டங்களும், ஒன்று கூடல்களும் இடம் பெறுவதாக குறித்த காணி பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ள பிரதேச வாசிகளின் ஆதங்கமாகவும். ஓட்டமாவடி பிரதேச செயகத்தின் மீது வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டாகவும் இருந்து வந்தது. அதன் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற கூட்டமானது மீராவோடை காணி பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாக ஓட்டமாவடி பிரதேச செயலகம் களத்தில் குதித்துள்ள விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் இடம் பெற்ற நிகழ்வுகளின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.(F)

www.youtube.com/watch?v=N61DQMHHf58

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here