அட்டாளைச்சேனை அபிவிருத்தியும்: எதிர்பார்ப்பும்

0
254

14555683_1771626293107297_2105494033_nமுகம்மத் இக்பால் சாய்ந்தமருது
கடந்த பொதுத்தேர்தலில் எதிர்பாராதவிதமாக திருகோணமலை மாவட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரசின் பிரதிநித்துவம் கிடைக்காததனால் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் 43 வீதமாக வாழ்கின்ற முஸ்லிம் மக்களினை கருத்திற்கொண்டு அம்மாவட்டத்துக்கே தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் தலைவரினால் வழங்கப்பட்டது.

இதனால் அட்டாளைச்சேனைக்கு தலைவரினால் வழங்கப்பட்ட வாக்குறுதியினை உடனடியாக நிறைவேற்ற முடியாமல் போனது.
இதனை மு.கா போராளிகளும் ஆதரவாளர்களும் புரிந்து கொண்டுள்ளார்கள். இதன் வெளிப்பாடு தான் கடந்த 27 ஆம் திகதி அட்டாளைச்சேனையில் நடைபெற்ற கூட்டத்தில் “அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவது பற்றி முஸ்லிம் காங்கிரசின் எதிரிகள் விமர்சனம் செய்யத்தேவையில்லை. அதனை நாங்கள் பார்த்துக்கொள்வோம்” என்று அமைச்சர் நசீர் அவர்கள் மிகவும் அழுத்தமாகக் கூறியிருந்தார்.

அட்டாளைச்சேனைக்கு தலைவரின் வாக்குறுதிப்படி பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்க வேண்டுமென்று மு.காவுக்கு உரிமையுள்ளவர்கள் அழுத்தம் வழங்குவதனை விட, நாளாந்தம் மு.கா.யும் தலைவரையும் விமர்சிப்பவர்களே இதனை ஒரு துரும்பாகப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட விமர்சனம் செய்கின்றார்கள்.

உண்மையில் மக்களுக்கு சேவைகள் செய்வதற்காகத்தான் பாராளுமன்ற உருப்பினர் பதவி அவசியமென்றால், அதனையும் விட அதிகமாக சேவைகள் வழங்கக்கூடிய வகையில், அதாவது குறித்த மாவட்டத்தோடு மட்டுப்படுத்தப்படாமல் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் வேலை செய்யக்கூடியவாறு நசீர் அவர்களுக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அதனையே முழு கிழக்கு மாகாணத்துக்கும் செய்து வருகின்றார். அத்துடன், தனது அட்டாளைச்சேனைக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவமில்லை என்ற குறைபாடு இருந்தாலும், பல ஊர்களிலுள்ளவர்கள் அட்டாளைச்சேனைக்கு சென்று அமைச்சர் நசீர் மூலமாக தங்களது குறைகளைத் தீர்த்து வருகின்றார்கள்.

கடந்த 27 ஆம் திகதி அட்டாளைச்சேனையில் அமைச்சர் நசீர் அவர்களின் முயற்சியினால், அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களின் உதவியினைக் கொண்டு பாரிய பல அபிவிருத்திப்பணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

அதில் இன்னும் பல புதிய அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இது மாற்றுக்கட்சி அரசியல் எடுபிடிகளைக் கிலி கொள்ளச்செய்துள்ளது.

அந்த வகையில், சுமார் 3௦௦ மில்லியன் ரூபாய் நிதியில் அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலை அவசர விபத்துப்பிரிவு, வைத்திய அதிகாரி விடுதி, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய குடும்ப நல உத்தியோகத்தர் விடுதி போன்ற கட்டடங்களுக்கான அடிக்கல் நடும் வைபவமும் மற்றும் அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி, ஷரீப் ஹாஜியார் வீதிக்கு காபட் இடுதல், கோணாவத்தை கப்பலடி வீதிக்கு காபட் இடுதல் போன்ற அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்துடன், கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயம், அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் விடுதி மற்றும் ஆலம்குலம் பல்தேவைக்கட்டடம், ஆலம்குலம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவுக்கான கட்டடம் ஆகிய அபிவிருத்திப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அபிவிருத்திப் பணிகளுக்கான பணம் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் நகரத்திட்டமிடல் அமைச்சின் மூலமாகவும் மற்றும் பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், ஏ.எல்.எம். நசீர் ஆகியோர்களின் சுகாதார அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு மூலமாகவும் பெற்றுக்கொள்ளப்பட்டது. மொத்தத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மூலமாகவே இந்த அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்றது.

எனவே, எவ்வளவு தான் அபிவிருத்திகளைச் செய்தாலும், காழ்ப்புணர்ச்சி கொண்டு முஸ்லிம் காங்கிரசை விமர்சனம் செய்வதற்கென்று ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கின்றது. இறுதியில் முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லையென்று கூறுவார்கள். இது அவர்களது உள்ளத்திலுள்ள குறைபாடுகளேயன்றி வேறொன்றுமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here