சட்டவிரோத மரங்களை ஏற்றி வந்த வாகனம் கிரான் பாலத்தினுள் விழுந்து விபத்து-வாழைச்சேனை வன இலகா வட்டார அதிகாரி எஸ்.தனிகாசலம்

0
290

tt (15)கல்குடா செய்தியாளர்
சட்டவிரோத மரங்களை ஏற்றி வந்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கிரான் பாலத்தினுள் திங்கட்கிழமை (28.08.2017) அதிகாலை விழுந்துள்ளதாக வாழைச்சேனை வன இலகா வட்டார அதிகாரி எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.

செங்கலடி மணலாறுப் பகுதியிலிருந்து சட்டவிரோத மரங்களை கிரான் பகுதியினூடாக ஓட்டமாவடிக்கு கொண்டு வரும் வழியில் புலியாய்ந்தகல் பகுதியில் வைத்து வாழைச்சேனை வன இலகா அதிகாரிகள் கைது செய்வதற்காக தஇடைமறித்த போது, அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக வேகமாக வந்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கிரான் பாலத்தினுள் விழுந்துள்ளது.

பத்து அடி தொடக்கம் பன்னிரெண்டு அடி நீளம் கொண்ட முப்பதுக்கு மேற்பட்ட தேக்கு மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இப்பகுதியில் சட்டவிரோத மரம் வெட்டும் பணி இடம்பெறுவதால் வன இலகா அதிகாரிகள் இப்பகுதியில் கடமையில் ஈடுபடுவதாகவும் வாழைச்சேனை வன இலகா வட்டார அதிகாரி எஸ்.தனிகாசலம் மேலும் தெரிவித்தார்.tt (1) tt (2) tt (9) tt (11) tt (13) tt (15) tt (16)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here