மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் அஸ்வா் -சிறு குறிப்பு

0
288

(அஷ்ரப் ஏ சமத்)
மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் அஸ்வா் சிறு குறிப்பு
பிறப்பு-1937. 08.02
வயது 80
இறப்பு 2017.08.29
வீட்டு முகவரி-இல, 04 பாத்தியா மாவத்த – சன்னங்கரா வீதி தெஹிவலை-
4 பிள்ளைகளின் தந்தை

அஸ்வா் அவா்கள் தமது கல்வியை டி.பி ஜாயா அவா்களின் வழிகாட்டலில் கொழும்பு சாஹிராக்கல்லுாாியில் தமிழ்-ஆங்கில மூலம் கற்று ஆங்கில மொழியில் பாண்டித்தியம் பெற்றதுடன், சிங்கள மொழியை மஹரகம பிரிவினா பௌத்த துறவிகளிடத்தில் கற்றாா்.

மஹரகம கபுரியா அரபுக்கல்லுாாியில் குர்ஆன், அரபு மொழியறிவைக்கற்றாா்.

சபாநாயகா் பாக்கீா் மாா்ககாரின் பிரத்தியோகச் செயலாளா் மற்றும் எம்.எச்.முஹம்மத்தின் இணைபாளாராகவும் சேவையாற்றினாா்.

அத்துடன், முஸ்லீம் கல்வி மாநாடு, அகில இலங்கை முஸ்லீம் லீக் மற்றும் அகில இலங்கை முஸ்லீம் வாலிபா் முன்னணிகளிலும் உப தலைவராக இருந்து நாடு முழுவதிலும் சமூக சேவைகளில் ஈடுபட்டாா்.

ஜே.ஆர் தொட்டு பிரேமதாசா, டி.பி விஜயதுங்க, ரணில் விக்கிரமசிங்க, முன்னளா் ஜனாதிபதிகளின் மும்மொழி பெயா்ப்பாளா், ஆர். பிரேமதாசாவினால் தேசியப்பட்டியல் பாராளுமன்றப்பதவி வழங்கப்பட்டு முஸ்லீம் சமய பண்பாட்டு இராஜாங்க அமைச்சரானாா்.

அவா் முன்னெடுத்த திட்டம் கலைஞா்களுக்கு கைகொடுத்த வாழ்வோரை வாழ்த்துவோம் எனும் தி்ட்டம், தேசிய மீலாத் விழா ஊடாக அப்பிரதேச வரலாற்று நுால்களை வெளியிட்டாா்.

அதன் பின்னா் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் பாராளுமன்ற விவகாரம், ஒம்புட்ஸ்மன், ஜனாதிபதியின் ஆலோசகா் பதவிகளை வகித்தாா்.

கிரிக்கட் வர்ணனையாளராகவும் தொலைக்காட்சி வானொலிகளில் பணியாாற்றினாா்.

ஏ.சி.எஸ்.ஹமீட் பாராளுமன்ற விவாதங்கள் அடங்கிய நுால்கள், மசூர் மொலானா பற்றிய நுால்களை எழுதியுள்ளார்.

இந்நாட்டில் சகல முஸ்லீம் தலைவா்கள், ஊர்களின் வரலாறுகளைத்தேடி அதனை உரையாற்றியுள்ளதுடன், அதனை குறிப்பாகவும் சோ்த்து வைத்துள்ளாா்.download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here