காணிப்பிரச்சினைக்கான தீர்வுகளுக்கு நீதிமன்றங்களை நோக்கி நகரும் மீராவோடை முஸ்லிம் சமூகம்-சாட்டோ மன்சூர்

0
423

cover pictureஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
கல்குடாத்தொகுதியின் கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலகத்தின் எல்லைகள் அன்றிருந்த மீராவோடை எனும் இன்றைய கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம், சபை ஆகிய நிருவாக எல்லைக்குட்பட்ட 207ஏ மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் பதுரியா நகர், மீராவோடை தமிழ் கிராம சேவைப்பிரிவுகளின் எல்லைகளில் அமைந்துள்ள பாரம்பரிய முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க முற்படும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகம், மீராவோடை தமிழ் கிராம சேவகர், மீராவோடை சக்தி வித்தியாலய அதிபர், கல்குடா கல்வி வலய பணிமனை, முஸ்லிம் காணி உரிமையாளர்கள் பற்றிய ஒரு வரலாற்றுப்பதிவே இது.

கல்குடா முஸ்லிம் சமூகத்தின் புவியியல் குடியிருப்புக்கள் சார்ந்த வரலாற்றுப்பின்னணியினை நோக்குகின்ற பொழுது, கண்டி இராசதாணி காலகட்டத்தில் அக்குரணையிலிருந்து அன்றைய அரசர்களால் 4000 முஸ்லிம் படை வீரர்களை சின்ன அக்குறனை என்ற பெயரினால் அழைக்கப்பட்டு சின்ன அக்குறனையாக பெயர் மருவி அழைக்கப்படும் அக்குரானையில் குடியமர்த்தியதாக வரலாறு கூறுகின்றது.

அக்குராணையிலிருந்து போக்குவரத்து இன்னோரன்ன கலாசார தேவைகளுக்காக வேண்டி குளக்கரைகளையும், ஆற்றங்கரைகளையும், கடலோரங்களையும் அண்மித்த பகுதிகளில் குடியமர்ந்தனர். அதன் தொடரில் மாதுறு ஓயா வாழைச்சேனை ஆற்றைக்கடந்து அன்று பள்ளித்திட்டி என்றழைக்கப்பட்ட ஹிஜ்ரா நகர் என்றும், 1985ம் ஆண்டு தொடக்கம் பதுரியா நகர் என்று அழைக்கப்படும் பழைய மீராவோடை சுமார் 450 வருடங்களைக் கொண்ட கிராமமுமாகும்.

இக்கிராமங்களில் வாழ்ந்த, வாழும், மக்களின் காணிகளுக்கான ஆவணங்களை நோக்குகின்ற போது, ஒல்லாந்தர், பிரித்தாணி ஆளுனர்கலாள் வழங்கப்பட்ட கிராண்ட் என்ற உறுதிகள் தொடக்கம் இன்றைய காணிகளுக்கான உறுதிகள் வரையுள்ள ஆதாரங்களும் இடைநடுவில் 1960ம் ஆண்டு தொடக்கம் 1966ம் ஆண்டு வரை சிறீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் கொண்டு வந்த தனியார் உறுதிக் காணிகளை அரச உடமையாக்குதல் என்ற நகர்வுகளில் நிறைய முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாரிய பல தோட்டங்கள் அபகரிக்கப்பட்டன.

அவற்றினை ஆதாரங்களாகவும், அன்று அரச நில அளவைத்திணைக்களத்தினால் அளவை செய்யப்பட்ட படங்களை ஆதாரங்களாகவும் கொண்டு வரையப்பட்ட நில அளவைப்படங்களைக் கொண்டு முஸ்லிம்களினுடைய காணிகள் அரச குடியிருப்பு நிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டன. இதன் வரலாற்றுப்பின்னணிகளைப் பின்னோக்கிப் பார்க்கின்ற பொழுது, வரலாற்றுபூர்வமாக 1884ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை காணிகளுக்கான ஆதாரங்கள் உறுதிகளாகவும், சுவர்ணபூமி உறுதிகள், ஜெய பூமி உறுதிகள் என்ற ஆவணங்கள் இருந்து வருகின்றன.

1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு வருகை தந்து முஸ்லிம்களின் காணிகளை அண்டிய குடியிருப்புக்காணிகளில் தங்களது பாதுகாப்பு முகாம்களை அமைத்தனர். முஸ்லிம்கள் தங்களுடைய இருப்பிடங்களை விட்டு வெளியேறி வேறிடங்களில் அகதிகளாக வாழ்ந்தனர்.

1990ம் ஆண்டு இன முறுகல்கள், யுத்தங்களைத் தொடர்ந்து சுமார் இரண்டு வருடங்கள் அயல் கிராமங்களில் குடிபெயர்ந்து வாழ்ந்தனர். தொடர்ந்து மீளக்குடியேறிய முஸ்லிம் மக்கள் மெதுமெதுவாக தங்களுடைய இருப்பிடங்களை மீட்டு வந்தனர்.

2002ம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து மீண்டும் இன்னுமொரு பகுதியினர் தங்களுடைய இழந்த காணிகளில் மீளக்குடியேறினர். தொடர்ந்து 2009ம் ஆண்டு யுத்த நிறைவுகளுக்கு வந்த பின்னர் மிகுதிப்பகுதியினர் தங்களுடைய பாரம்பரியக் காணிகளில் மீளக்குடியேற எத்தணித்த பொழுது, மீராவோடை தமிழ் கிராம சேவை உத்தியோகத்தர் கிருஸ்ணகாந்தன் தலைமையில் தமிழ் இளைஞர்கள் முஸ்லிம்களால் தங்களுடைய காணிகளுக்கு இடப்பட்ட வேலிகளை அடித்து நொறுக்கி தேசப்படுத்தினர்.

அதன் தொடரில், திரு. கிருஸ்ணகாந் கிராம சேவை உத்தியோகத்தருக்கும் முஸ்லிம் காணி உரிமையாளர்களுக்குமிடையில் இடம்பெற்ற நில அளவைத்திணைக்களத்தின் மட 9 படத்தில் காட்டபட்டுள்ள A,B,C,D- 5488,5481,5502,5503 ஆகிய சுவர்ண பூமி காணி அனுமதிப்பத்திர  இலக்கங்களைக் கொண்ட காணிகள் அடையாளம் காணப்பட்டதோடு, மீராவோடை சக்தி வித்தியாலயத்தின் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தின் PP மட 9 காடப்பட்டுள்ள 10ம் இலக்க காணி மைதானத்திற்குள் உள்ளதெனவும், அதற்கான மாற்றுக்கணிகளை வேறிடங்களில் கொடுப்பதாகவும் அன்றைய கிராம சேவை உத்தியோகத்தர் திரு.கிருஸ்ணகாந்தன் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி. தினேஸ் கெளரி ஆகியோர் உடன்பாடு கண்டிருந்தனர். மேற்படி உடன்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லையென்பது இன்று வரையன பிரச்சனைகளுக்கான முக்கிய காரணங்களாகும்.

2013ம் ஆண்டு தொடக்கம் 2014ம் ஆண்டுகளில் புதிதாக நியமிக்கப்பட்ட மீராவோடை தமிழ் கிராம சேவை உத்தியோகத்தர் மட 9 படத்தில் காட்டப்பட்டுள்ள PP இலக்கங்கள் TP காணி இலக்கங்கள் என்பனப் புறக்கணிக்கப்பட்டு, புதிய நில அளவைப்படங்கள் தாயாரிக்கப்பட்டு வாதப்பிரதிவாதங்களும், பிணக்குகளும், ஆர்ப்பாட்டங்களும் அதனோடு சேர்த்து அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் ஆர்ப்பாட்டங்களும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி கோறளைப்பற்று வாழைச்சேனை புதிய பிரதேச செயலாளரும், கிராம சேவை உத்தியோகத்தரும் புதிய நில அளவை வரை படங்களைக்கொண்டு தமிழ் முஸ்லிம் பாரம்பரிய வசிப்பிட காணி தொடர்பான வரலாறுகளைத் திருத்தி எழுதி இனங்களுக்கிடையிலான இன முறுகல்களை ஏற்படுத்த முற்பதுவதுடன், இன்று நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

தொடர்ந்து பிரதேச செயல்கங்களில் அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களின் தலைமைகளில் கூட்டங்கள் கூட்டப்பட்டு தீர்வுகளை நோக்கிப் பயணிப்பதற்கான ஆறுதல்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் தொடரில் பொலிஸ் நிலையங்களில் விசாரணைகளும், சந்திப்புக்களும் நடைபெற்று வருகின்றன.

மேலும் பிரதேச, மாவட்ட, மாகாண, தேசிய, சர்வதேச சமூகங்களின் பேசு பொருளாக இக்காணிப் பிரச்சனைகள் விஸ்பரூபமெடுத்துள்ளன. தீர்வுகளை நோக்கிய பயணங்களில் காணி உரிமையாளர்கள், அரச நிறுவனங்கள், அரசியல் தலைமைகள், நீதி மன்றங்களை நோக்கி முன்னோகி நகர்கின்றனர்.

எனவே, கீழ் வரும் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களின் விபரங்கள் சமர்ப்பிக்கபடுகின்றன.
முஸ்தபா லெப்பை றாஹிலா உம்மா – NO  42614
வெள்ளையார் முஸ்தபா லெப்பை – NO 5503
முஹம்மதலியார் றஹ்மத்தும்மா – NO 42606
முஹம்மதலியார் செய்லத்தும்மா –NO 42609
உதுமா லெப்பை அஹமது லெப்பை –NO 40617

எனவே, எங்களுடைய பாரம்பரிய காணிகளில் வாழ்வதற்கான ஒழுங்குகளைச் செய்து தருமாறு தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். தங்களுடைய நகர்வுகள் முன்னோக்கி நகர இறையாசியை வேண்டுகின்றோம். வாசகர்களின் பார்வைக்காக நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரதியையும் இங்கே இணைத்துள்ளோம்.01 02 03 04 05 06 07 08 09 10 11 12 cover picture

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here