மியன்மார் முஸ்லிம் ஆதரவு அகிம்சைவழி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

0
229

21192867_1896917620520930_8367217553187803965_nஎம்.ரீ.ஹைதர் அலி
மியன்மார் நாட்டிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்களுக்கெதிராக அந்நாட்டு அரசு மற்றும் இனவாதக்குழுக்களினால் மிக மோசமானதொரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதன் காரணமாக அந்நாட்டிலுள்ள எமது சகோதர முஸ்லிம்களின் உயிர்கள் மிகவும் கொடூரமான முறையில் காவு கொள்ளப்பட்டும், பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டும், உடைமைகள் நிர்மூலமாக்கப்பட்டும் வருகின்றன.

மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசே முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக தன் நாட்டு மக்களைக்கொன்று குவிக்கும் இம்மிலேச்சத்தனமான இனப்படுகொலைகளுக்கெதிராக குரல் கொடுப்பதனூடாக, இப்பிரச்சினையினை சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பவற்றின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு, பல்லின சமூகங்களின் தாயகமாக விளங்கும் எம் நாட்டு அரசை மியன்மார் அரசுக்கெதிராக அழுத்தங்களைப் பியோகிப்பதற்கும் தூண்ட வேண்டியதொரு பொறுப்பு முஸ்லிம்களாகிய எம்மனைவருக்குமுள்ளது.

எனவே, எமது ஷிபா பௌண்டேசன் (SHIFA FOUNDATION) மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 01.09.2017ம் வெள்ளிக்கிழமை ஜும்ஆத்தொழுகையின் பின்னர் காத்தான்குடி ஜாமியுல்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்து அகிம்சைவழி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுப்பதோடு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கான மகஜரொன்றினையும் கையளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, இக்கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைத்து பள்ளிவாயல்கள், சமூக நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எம் சகோதர உறவுகளுக்காக குரல் கொடுக்க முன்வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here