அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மட்டு.மாவட்ட செலயகத்தில் நாற்று நடும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு

0
193

DSC_0232எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்ட இளம் விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு நெல் நாற்று நடும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செலயகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தினூடாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இளம் விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு நெல் நாற்று இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் விவசாய தொழில் முயற்சியாளர்களில் தெரிவு செய்யப்பட இளம் விவசாயத்தொழில் முயற்சியாளர்கள் 9 பேருக்கு நெல் நாற்று இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் மட்டக்களப்பு  மாவட்ட  செயலகத்தில்   நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவாட்ட செயலகத்தில் அராசாங்க அதிபர் திருமதி  பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இந்த இயந்திரங்களை வழங்கி வைத்தார்.  ஒவ்வொரு விவசாயிக்கும் இரண்டு இயந்திரங்கள் வீதம் மொத்தமாக 18 இயந்திரங்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட விவசாய அலுவலக பதவி நிலை உதவியாளர்  திருமதி ஜி.ரவிராஜ் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கலந்து கொண்டனர்.DSC_0232 DSC_0234 DSC_0239 DSC_0245 DSC_0246

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here