மட்டு.மாவட்ட செலயகத்தின் பாடுமீன் பகல் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு-அதிதி நயனா இ. சேனாரத்ன

0
261

DSC_0127எஸ்.எம்.எம்.முர்ஷித்
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தினால் 12 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பாடுமீன் பகல் பராமரிப்பு நிலையம்  சிறுவர் செயலகப்பணிப்பாளர் திருமதி நயனா இ. சேனாரத்னவால் நேற்று 30.08.2017ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

உதவி மாவட்டச்செயலாளர் எஸ்.நவேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் வி.தவராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் எஸ்.அசீஸ், மாவட்ட பொறியியலாளர் ரி.சுமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சார்பாக சிறுவர் செயலகப்பணிப்பாளர் திருமதி நயனா இ. சேனாரத்னவுக்கான நினைவுச்சின்னத்தினை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உத்தியோகத்திற்குச் செல்லும் பெற்றோரின் பிள்ளைகளைப் பகல் வேளையில் பராமரிக்கும் வகையில் இயங்கவுள்ள இப்பாடுமீன் பராமரிப்பு நிலையத்தில் குழந்தைகளுக்கான அனைத்து வசதி வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட செயலகத்தினால் அமைக்கப்பட்டுள்ள இந்த பகல் பராமரிப்பு நிலையம் மட்டக்களப்பு மாநகர சபையினூடாகச் செயற்படுத்தப்படவுள்ளது. உத்தியோகங்களுக்குச் செல்லும் பெற்றோரின் பிள்ளைகளைப் பராமரிக்கும் வகையில், காலை 6.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் சனி, ஞாயிறு அரச விடுமுறை தவிர்ந்த நாட்களில் இந்நிலையம் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இந்நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட 20 குழந்தைகளைப் பராமரிக்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. DSC_0125 DSC_0127 DSC_0130 DSC_0134 DSC_0138 DSC_0140 DSC_0145 DSC_0154 DSC_0162 DSC_0168 DSC_0178

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here