இளங்கலைஞர் அறிமுகம்-எம்.யூ.அல்சாத்

Spread the love

10811486_876682309017360_2116077680_nஅபூ அனு

கல்குடா மண் பல கலைஞர்களைத்தந்துள்ளது. தினமும் புதுப்புது முகங்கள் இலக்கிய உலகில் தடம்பதித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது கவிதை, கட்டுரை, சிறுகதை எனப்பல துறைகளில் தனக்கெனவொரு தனியிடத்தைப் பெற்று வளர்ந்து வரும் எழுத்தாளர் தான் 24 வயதுடைய முஹம்மது உசனார் அல்சாத் அவர்கள்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தாதியியல் பட்டப்படிப்பின் மூன்றாம் வருட மாணவனான இவரது கவிதைப் பயணமானது, பள்ளிப்பருவத்தில் நடாத்தப்பட்ட பல கவிதைப்போட்டிகளில் கலந்து வெற்றி கண்டது முதல் இன்று பத்திரிகைககளான மித்திரன் வாரமலர்,தினமுரசு வாரமலர், மெட்ரோ நியூஸ், உதய சூரியன், சுடர் ஒளி வாரமலர், வானவில் போன்றவற்றிற்கும் எம்.யூ.அல்சாத் என்ற பெயரில் தொடர்கிறது.

மென்மேலும், இவரது இலக்கியப்பணி, எழுத்துப்பணி தொடர கல்குடா நேசன் அவரை வாழ்த்துகிறது.

கல்குடா நேசனின் இளங்கலைஞர் அறிமுகம் எனும் பகுதியில் உங்கள் அறிமுகமும் இடம்பெற விரும்பினால், உங்களைப் பற்றிய விபரங்களையும், உங்கள் ஆக்கங்களையும் எமது kalkudahnation2013@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

10811486_876682309017360_2116077680_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*