சாய்ந்தமருதில் நபி வழி பெருநாள் திடல் தொழுகை.

0
221

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Islah Logoஹஜ் பெருநாள் தினமான செப்டம்பர் (02) சனிக்கிழமை அன்று ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சரியாக காலை 06.30 மணிக்கு சாய்ந்தமருது – 12, கடற்கரை வீதியில் அமைந்துள்ள மீனவர் வாசிகசாலைக்கு அருகே உள்ள திடலில் சட்டபூர்வமாக இடம்பெறும் என பள்ளிவாசலின் தலைவர் எஸ். எம். இனாமுல்லாஹ் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்கும் ஒரே நேரத்தில் மௌலவி அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஸாதிக் ஸலபியால் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பின்னர் குத்பா பிரசங்கமும் நிகழ்த்தவிருப்பதாகவும் அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் திடல்தொழுகைக்கு வரும்போது அனைவரும் தங்களது வீட்டில் வுழு செய்துகொண்டு வருமாறும் குறித்த நேரமான காலை6.30க்கு தொழுகை ஆரம்பிக்கப்படும் எனவும் யாருக்காகவும் தொழுகைநேரம் தாமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.(F)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here