மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிரான மிலேச்சத்தனத் தாக்குதல்களைக் கண்டித்து காத்தான்குடியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

0
278

1-IMG_2424(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கெதிராக அந்நாட்டு இராணுவத்தினராலும், பௌத்த தீவிரவாத அமைப்புக்களினாலும் திட்டமிட்டு மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்படும் இனவாதத் தாக்குதல்களைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டமும், கண்டனப்பேரணியும் இன்று 01 வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் காத்தான்குடி-05 ஜாமிஉழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயலிலிருந்து  ஆரம்பமாகி காத்தான்குடி பிரதான வீதி வரை சென்றது.

கிழக்கு மாகாண மக்கள் சார்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனப்பேரணியில் கலந்து கொண்ட காத்தான்குடி மக்கள் காத்தான்குடி-05 ஜாமிஉழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயலிலிருந்து நடை பவனியாக மட்டு-கல்முனை -காத்தான்குடி பிரதான வீதி வழியாக காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்று ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான ஐந்து அம்சக்கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை காத்தான்குடி உதவிப்பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், முன்னாள் கிழக்கு மாகண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், முன்னாள் காத்தான்குடி நகர சபைத்தவிசாளர் அஸ்பர் உட்பட முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான றவூப் ஏ.மஜீட், எம்.எச்.எம்.பாக்கீர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் சபீல் நளீமி, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் றிஸ்வான் மதனி உட்பட அதன் பிரதிநிதிகள், காத்தான்குடியிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் ஆகியோர் மியன்மார் அரசே ரோஹிங்கிய முஸ்லிம்களின் மனிதப்படுகொலையை உடன் நிறுத்து, மனித உயிர்களுக்கு மதிப்பளி, மியன்மார் அரசே ரோஹிங்கிய குழந்தைகளைக் கொல்லாதே, மியன்மார் அரசே நிறுத்து நிறுத்து மனிதப்படுகொலை அவலத்தை நிறுத்து, ஐ.நாவே அப்பாவி ரோஹிங்கிய முஸ்லிம்களைப் பாதுகாரு, அழிகிறது மனிதம் ஐ.நா கண்ணைத் திற போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிகள் உட்பட காத்தான்குடி பிரதேச செயலகம் ஆகியவற்றில் காத்தான்குடி பொலிசார் மற்றும் காத்தான்குடி போக்குவரத்துப் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.1-IMG_2424 4-IMG_2439 5-IMG_2461 6-IMG_2465 7-IMG_2447 8-IMG_2449 9-IMG_2469 10-IMG_2457 11-IMG_2385 12-IMG_2387 13-IMG_2474 14-IMG_2475 15-IMG_2476

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here