தியாகங்களை நினைவுகூறும் தியாகத்திருநாளில் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகியுள்ள மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காகப் பிரார்த்திப்போம்-பெருநாள் வாழ்த்தில் அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ்

0
44

DSCN9517தியாகங்களை நினைவுகூறும் தியாகத்திருநாளாம் புனித ஹஜ்ஜூப்பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் என்ற காரணத்துக்காக பல்வேறு தியாகங்களைச் சுமந்தவர்களாக இனச்சுத்திகரிப்புக்குள்ளாகியுள்ள மியன்மார் ரோஹிங்கிய  முஸ்லிம் உறவுகளுக்காகப் பிரார்த்தனை செய்வோம் என கல்குடாத்தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் கணக்கறிஞருமான அல் ஹாஜ் எச்.எம்.எம்.றியாழ் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அச்செய்தியில் மேலும் குரிப்பிடப்படுள்ளதாவது,

இன்று இலங்கை முஸ்லிம்களும் சர்வதேச முஸ்லிம்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டவர்களாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் நாம் இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாளை அடைந்துள்ளோம்.

இப்புனித ஹஜ்ஜுப்பெருநாள் பல்வேறு தியாகங்களையும், படிப்பினைகளையும் எமக்கு வழங்கியுள்ளது. இதனைக்கவனதிற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எமது உறவுகள் ஒரு பக்கம் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்ற இன்றைய நிலையில் வீணான கேளிக்கைகள் அனைத்தையும் தவிர்ந்து, அவர்களுக்காகப் பிராத்தனை புரிய வேண்டியது எமது கடமையாகும்.

அத்துடன், வீணான கேளிக்கைகளும் களியாட்டங்களும் எம் சமூகத்திற்கு என்றைக்குமே எழுச்சியைத் தராது என்பதையும் மனதிற் கொள்வோம்.

எமக்கெதிராக மேற்கொள்ளப்படும் சதிகள், அடக்குமுறைகளை பொறுமையுடன் எதிர்கொண்டு வெற்றி கொள்ள முயற்சிக்க வேண்டுமென்பதுடன், அர்ப்பணிப்புடன் சகலரும் பயணிக்க வேண்டிய கட்டாயத்திலும் வாழ்கிறோம்.

இவைகளையே ஹஜ்ஜும் அதனுடனான கிரிகைகளும் எமக்கு உணர்த்துகின்றது. இவைகளை மனதிற்கொண்டு பல்வேறு இனக்குழுமங்கள், மதங்களைப் பின்பற்றும் இலங்கைத்தீவில் வாழும் எமக்கு ஏற்படும் சோதனைகள் அச்சுறுத்தல்களும் நீங்கவும் ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களின் நிம்மதிக்காகவும் இப்புனித தினத்தில் பிரார்த்தனை புரிவோம் என கல்குடாத்தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் கணக்கறிஞருமான அல் ஹாஜ் எச்.எம்.எம்.றியாழ் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here