உலக சமாதானத்திற்காகப் பிரார்த்திபோம்-பெருநாள் வாழ்த்துச்செய்தியில் நாமல் ராஜபக்‌ஷ எம்பி

0
154

IMG_1969நாட்டில் நிரந்திர சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட இந்த ஈகைத்திருநாள் வழி வகுக்க வேண்டுமென ஹாம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது பெருநாள் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பல்லினங்கள் வாழும் இந்நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்பட இந்த ஈகைத்திருநாளில் ஒவ்வொரு முஸ்லீமும் பிரார்த்திப்பது இன்றைய நாளில் தமது கடமையாகும். ஏனைய இனங்களுடன் ஒற்றுமையைப்பேணி வாழ நாம் நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் உதவி செய்து இஸ்லாமிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க உதவ வேண்டும்”

இத்தகைய சந்தர்ப்பத்தில் நபி இப்ராஹிம் (அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை நினைவு கூரும் இவ்வேளையில், முஸ்லிம்கள் தங்களது தியாக உணர்வையும், ஈமானிய உணர்வையும் மேலும் மெருகூட்டிக்கொள்கிறார்கள்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அடுத்தவர்களை பரஸ்பரம் மதித்து, நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஐக்கியத்துடனும் நல்லிணக்கமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நல்லிணக்கமும் நட்புறவும் அவர்கள் பின்பற்றும் இஸ்லாம் மார்க்கம் அவர்களிடம் ஏற்படுத்திய பண்புகளாகும்.

இந்த விசேட தினத்தில் முஸ்லிம்களுடைய பிரார்த்தனைகள் எல்லா மக்களினதும் சமாதானத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் இருக்குமென்பதில் சந்தேகமில்லை. இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஈதுல் அல்ஹா வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here