சிறப்பாக நடைபெற்ற கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – செம்மண்ணோடையில்.

0
246

(எச்.எம்.எம்.பர்ஸான்)

aaaaaaகல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இன்று (2) சனிக்கிழமை செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

குறித்த ஹஜ் பெருநாள் தொழுகையினை அஷ்ஷெய்க் எம்.பீ.எம். சியாம் (ஹலீமி) அவர்களினால் தொழுகை  நிறைவேற்றியதோடு குத்பா பேருரையினை ஜம்இய்யாவின் நிர்வாகத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் (காஸிமி) அவர்கள் நிகழ்த்தினார்கள், நபி இப்ராகிம் (அலை) அவர்களின் தியாகமும் அவர் இந்த இஸ்லாமிய சமூகத்துக்கு செய்த பணிகள் பற்றியும் தனது உரையில் கூறினார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நபி இப்ராகிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறுகின்ற இந் நன்னாளில் நாம் அனைவரும் நம் சகோதர முஸ்லிம்களாகிய மியன்மார் மக்களுக்காக இந்த சந்தர்ப்பத்தில் பிரார்த்திற்க கடமைப்பட்டுள்ளோம். கலிமா சொன்ன ஒரே காரணத்துக்காக அந்த மக்களை அந் நாட்டு இராணுவத்தினர் இந்த நிமிடம்வரை கொடுமைப்படுத்தி கொன்றுகுவித்து வருகின்றார்கள். நாம் வீணான களியாட்டங்களில் ஈடுபடாமல் இஸ்லாம் காட்டித்தந்த பிரகாரம் இந்த பெருநாளைக் கொண்டாடுவோம் என தனதுரையில் கூறினார்.(F)81f02637-b424-4b20-a9e3-124e47730955 410cf79e-a7d8-4512-b9a5-3186cb9ddbaa (1) DSC_0087 DSC_0092

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here