வேற்றுமை, கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையின் யாதார்த்தங்களை உலகிற்குப்புரிய வைப்போம்-எம்.எஸ்.எம்.ரிஸ்மி

0
275

2017-08-30-PHOTO-00000057இக்பால் அலி
இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் என்னுடைய உள்ளம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அகில இலங்கை வை.எம். எம். ஏ. பேரவையின் தேசிய பொதுச்செயலாளர் எம்.எஸ்.எம்.ரிஸ்மி தெரிவித்தார்.

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அகில இலங்கை வை எம்.எம்.ஏ.பேரவையின் தேசிய பொதுச்செயலாளர் எம்.எஸ்.எம்.ரிஸ்மி பெருநாள் வாழ்துச்செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில்,

உலக முஸ்லிம்கள் மக்காவில் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற ஒன்றுகூடும் நிகழ்வு மிகவும் ஆழமான எண்ணக்கருவைக் கொண்டது. இன, மொழி,பிரதேச, எல்லை என்கின்ற வேறுபாடுகளுக்கப்பால் அன்பு, நட்பு, பரஸ்பரம், ஒற்றுமை மற்றும் தியாகம் ஆகிய பெரும் விளக்கங்களை நெறிப்படுத்தும் அசம்சங்களை ஆணித்தரமாக எடுத்தரைக்கின்றது.

எனவே, இந்நன்நாளில் எம்மிடையே காணப்படும் வேற்றுமைகளையும் கருத்து வேறுபாடுகளையும் மறந்து, எமது சகோதரர்களோடும் ஏனைய சமூகத்தினரோடும் வாஞ்சையோடு பழகி ஒற்றுமையின் யாதார்த்தங்களை உலகிற்குப்புரிய வைக்க வேண்டும்.

இச்சந்தர்ப்பத்தில் நாடாளாவிய ரீதயில் அமைந்துள்ள 100க்கும் மேற்பட்ட எமது கிளையைச்சார்ந்தவர்களுக்கும் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here