கருத்து முரண்பாடுகளை மறந்து, ஒற்றுமையூடாகப் பயணிப்போம்-பெருநாள் வாழ்த்துச்செய்தியில் அமைச்சர் எம்.எச்.ஹலீம்

0
70

2017-08-29-PHOTO-00000011இக்பால் அலி
ஈகைத்திருநாளான புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் எமது நாட்டு அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமிதமடைகின்றேன் என ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஹலீம் தமது பெருநாள் வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு இதனைத்தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில்,

முஸ்லிம் என்பவன் மறுமைக்காகவும் அல்லாஹ்வின் திருப்திக்காவும் வாழ்பவன் என்பது தான் இஸ்லாமிய வாழ்வியலின் அடிப்படைத்தத்துவமாகும். அந்த வகையில், இஸ்லாமிய மார்க்கத்தில் ஐந்தாவது கடமையான ஹஜ் கடமையும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. பாவங்கள், முறைகேடுகள், தகாத வழிமுறைகளிலிருந்து அல்லாஹ்விடம் இரு கைகளையும் ஏந்தி பாவக்கறைகளையும் போக்கிடும் உன்னதமான நாளாகும்.

அரபா மைதான்தில் அல்லாஹ் விடம் அழுது மன்றாடி நேரடியாக  பாவமன்னிப்புக்கேட்டு அறநெறி பிறழாத நன்னடைத்தை கொண்ட  மனிதப்புனிதர்களாக அல்லாஹ்வின் திருப்பொருத்ததோடு மனிதனின் ஆத்மீக வாழ்விற்கு அவசிமான  உயர்  நற்கிரியைகள் செய்து தூய இஸ்லாத்தின் வழிமுறையை நிலை நாட்டவும் நல்வழிப்படுத்தவும் வல்லமையுடையது.

அத்துடன், இன, நிற, மொழி, பிரதேச, எல்லை என்கிற வேறுபாடுகளுக்கப்பால் தூய்மையான வெண்ணிற ஆடையோடு இணைந்தும் சேர்ந்தும் நெருக்கமான வாழ்வுக்கான  வழிமுறைகளை ஹஜ் கடமை நன்கு கோடிட்டுக் காட்டியுள்ளது.

எனவே, எமது சமூகத்தினுள் தலை நிமர்ந்து நிற்கின்ற கருத்து முரண்பாடுகளை மறந்து, நம்மிடையே ஒற்றுமையை வளர்த்துக் கொள்வதன் மூலம் எதனையும் எதிர்கொள்கின்ற சக்தியுடைய முழுமையான கட்டமைப்பைக் கொண்ட சமூகமாகத் திகழ்வோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here