யாழில் இரு வேறிடங்களில் ஹஜ் பெருநாள் தொழுகைகள்

0
216

பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் முஸ்லிம் வட்டார மக்களுக்கான பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் மௌலவி அப்துல் அஸீஸ் (காசிமி) தலைமையில் நடைபெற்றது.

அத்துடன் யாழ்ப்பாணம் பூங்காவிற்கு முன்னாலிருக்கும் யாழ் மாநகர மைதானத்தில் தௌஹீத் ஜமாத் அமைப்பின் பெருநாள் தொழுகை அஷ்-ஷெய்க் பைசல் (மதனி) தலைமையில் நடைபெற்றது.

இப்பெருநாள் தினமானது இறைத்தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் எனக்கொண்டாடப்படுகின்றது.

வசதி படைத்த முஸ்லிம்கள், இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் இறுதிக்கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா சென்று மார்க்கக் கடமைகளில் ஈடுபடுவார்கள்.

உலகின் சகல பாகங்களிலிருந்தும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா மாநகரில் மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளைக்கடந்து இலட்சக்கணக்ககானவர்கள் ஒன்றுகூடி ஹஜ் வழிபாடுகளில் ஈடுபடுவது இத்தினத்தின் விசேட அம்சமாகும்.14212748_706583312833043_6468969823997320022_n 14322247_706583386166369_8016306222030875303_n-1 IMG_3264 IMG_7451 IMG_7455 IMG_7468 received_1418516554863431 snapshot43 snapshot44 snapshot117 snapshot129 snapshot130 snapshot135 snapshot136 snapshot137 snapshot138 snapshot139

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here