ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிரான சித்திரவதைகளைக் கண்டித்து அட்டாளைச்சேனையில் ஆர்ப்பாட்டம்

0
249

21192254_2066890353534191_677599509558580217_nமியன்­மாரில் ரோஹிங்கியா முஸ்­லிம்கள் மீது மியன்மார் அரச படை­யினர் மற்றும் பௌத்த தேசி­ய­வாத அமைப்­புக்கள் மேற்­கொண்டு வருகின்ற வன்­செ­யல்­களை உட­ன­டி­யாக தடுத்து நிறுத்தி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க ஐக்­கிய நாடுகள் சபை முன்­வர வேண்டும். அத்துடன் கொடூர கொலைத்தாக்குதல்களை நிறுத்தி உடனடியாக ஐ.நா. விசாரணை செய்ய வேண்டுமென்று கோரி இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று அட்டாளைச்சேனை கோணாவத்தையில் இடம்பெற்றது.

அம்பாரை மாவட்டப் பொதுப்பணிகள் அமைப்பின் தலைவரும் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் யூ.எல்.எம்.வாஹிட், பிரதி சுகாதார அமைச்சின் இணைப்பாளர் போராளி சுபியான் ரமீஸ், வைத்திய கலாநிதி டாக்டர் நக்பர் மற்றும் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்காக வந்திருந்த பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

ரோஹிங்கியா முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னைகள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபையின் தலை­மை­ய­கத்­துக்கு உட­ன­டி­யாக    அராபிய நாடுகள் கடும் போக்குடனான கட்டளைகளையிட வேண்டுமென்றும் வல்லரசுகள் முஸ்லீம்கள் விடயத்தில் பொடுபோக்காய் இருப்பதனைக் கண்டிக்கிறோம் என்றும், ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும் அல்லது அம்மகளுக்கு பிற நாடுகளில் அடைக்கலம் கொடுக்க வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கோசமெழுப்பினர்.

அத்துடன், மியன்­மாரில் ராங்கைன் மாநி­லத்தில் சுமார் 11 இலட்­சத்­துக்கும் அதி­க­மான ரோஹிங்கியா முஸ்­லிம்கள் வாழ்­கின்­றனர். அவர்கள் அங்கு 1200 வரு­டங்­க­ளுக்கு மேல் வாழ்ந்து வரு­வ­தாக வர­லாற்றுச்சான்­றுகள் இருந்தும், அம்­மக்­க­ளுக்கு குடி­யு­ரிமை வழங்க மியன்மார் அரசு முன்­வ­ர­வில்லை. குடி­யு­ரிமை இல்­லா­மையால் எந்த உரி­மையுமற்ற சமூ­க­மாக மிகவும் மோச­மான முறையில் பௌத்த தேசி­ய­வாத அமைப்­புக்­க­ளாலும், மியன்மார் அர­சி­னாலும் ஒடுக்­கப்­பட்டு வரு­கின்­றனர். உலகின் மிகப்­பெ­ரிய ‘நாடற்ற சிறு­பான்மைச்சமூ­க­மாக’ அடை­யாளப்­ப­டுத்­தப்­படும் ரோஹிங்கியா முஸ்­லிம்கள் மீது பௌத்த தேசி­ய­வாத அமைப்­புக்­க­ளி­னதும், மியன்மார் இரா­ணு­வத்­தி­னதும் வரம்பு மீறிய அட்­டூ­ழி­யங்கள், தாக்­கு­தல்கள் கடந்த சில தினங்­க­ளாக அதி­க­ரித்­துள்­ளன”

குறித்த நாட்டுக்குள் சமூகத்தொண்டு நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், விசாரணைக்குழுக்கள் யாரையும் அனுமதிக்க முடியாதென்று அந்நாட்டு அரசு பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், அங்கு பிரச்சனைக்குள்ளாகியிருக்கும் மக்களின் சரியான நிலமையினைக் கண்டு அல்லது கேட்டறிந்து கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது.

எனவே, குறித்த கொடூரமான கொலைக்களமாக மாறியுள்ள மியன்மார் பிரச்சனையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவித்த அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.21192098_2066890223534204_1384695299674387568_n 21192254_2066890353534191_677599509558580217_n 21192610_2066890443534182_6119349810424351689_n 21192769_2066890523534174_6345487750612959496_n 21192946_2066889470200946_9192114066185424008_n 21230801_2066889490200944_1021964214889940781_n 21314564_2066890543534172_2142571655789710764_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here