இறக்காமம்-மாணிக்கமடுவில் பதற்றம் : அமைச்சர் நஸீர் களத்தில்

0
291

0சப்னி அஹமட்-
இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தின் இன்று காலை முதல் மாலை வரை சில சிங்கள புத்தர்களும், சிங்களவர்களும் இணைந்து தமிழ் நபரிடமிருந்து காணியொன்றைக் கொள்வன்வு செய்து அதனுள் சில சுத்த நடவடிக்கைகளையும் அவர்களுக்கான அமைவிடங்களையும் அமைப்பதற்கான நடவடிக்கைகளை சட்ட விரோதமாக இன்று (02.09.2017) மேற்கொண்டதால் அங்கு பதற்ற நிலை தோன்றியது.

குறித்த சம்பவத்தை ஆராய்வதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் விஜயம் மேற்கொண்டு குறித்த மத அமைப்பின் பிரதிநிதிகளுடனும், பாதுகாப்புப் படையினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அங்கு நடைபெறவிருந்த வேலைத்திட்டங்களைத்தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், இது தொடர்பில் நேரடியாக ஜனாதிபதியின் கவனதிற்கொண்டு வருவதற்கான நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடந்து குறித்த பதற்ற நிலை அமைதியான நிலைக்குத் திரும்பியதுடன், இது தொடர்பான விரிவான ஆராய்வுகளும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதுடன், அங்கு பெளத்தகளால் மேற்கொள்ளவிருந்த செயற்பாடுகள் அனைத்தும் அமைச்சரின் தலையீட்டால் நிறுத்தப்பட்டது.0 01 02 05

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here