பர்மாவில் மரித்துப்போன மனிதம் – காவத்தமுனை ஹாறூன்

0
292

இரத்தக் காயங்களால்
மரத்துப்போன உடல்கள்
மலிந்து கிடக்கிறது பர்மாவில்
 
மதம் பிடித்த
மனிதர்களால்
புனித இஸ்ஸலாத்தை ஏற்ற குற்றத்துக்காக
கடித்துக் குதறப்பட்டு,
ஆற்றிலும் சேற்றிலுமாய்
அழுகிக் கிடக்கிறது அங்கே
இஸ்லாமிய உடல்கள்.
 
ஆங்சாங் சூகியின்
ஆசீர்வாத்த்தோடு
சின்னப் பிள்ளைகளின்
சீருடல் கூட
பிய்த்து, சின்னாபின்னமாக்கி
பர்மா முழுவதும்
துக்கியெறியப்படுகிறது.
 
அத்தனையும் அள்ளியெடுத்து
அடக்கம் செய்யவே
நெடுநாள் எடுக்கும் என
ஊடகங்கள் உரத்துச் சொல்லியும்
எதையும் கண்டுகொள்ளாது
மெளனப் போர்வைக்குள்
ஒழிந்து கொண்டது சர்வதேசம்
 
கலிமா சொன்ன காரணத்திற்காக
கர்ப்பிணி பெண்களைக்கூட
கீறிக் கிழிக்கும்
வரலாற்று துரோகத்தை
பர்மாவில்தான்
காணமுடிகிறது.
 
ஒன்று மட்டும் தான் புரியவில்லை.
எல்லை மீறிய தொல்லைகளால்
ரோகின்ய முஸ்லிம்கள்
துவம்சம் செய்யப்படும் போது
எதற்கெல்லாமோ
குரல் எழுப்பும் தேசியம்
இதை மட்டும் கண்டு கொள்ளாமல்
கண்ணைக்கட்டிக்கொண்டு,
மெளனம் காப்பதின்
மர்மம் தான் என்ன????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here