அரையிறுதிப்போட்டியில் விக்டோறியஸ் வெற்றி: இறுதிப்போட்டிக்குள் நுழைவு

Spread the love

1 (6)(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை விக்டொரியஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் டெமார்க் சவால் கிண்ணம்-2017 சுற்றுப்போட்டியின் 2வது அரையிறுதிப்போட்டியில் விக்டோறியஸ் விளையாட்டுக்கழகம்  வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவானது.

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழகம் நாடாத்தும்  டெமார்க் சவால் கிண்ணம்-2017 சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி 01 ஆம் திகதி கல்முனை சந்தாங்கேணி பொது  விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் மட்டக்களப்பு  லக்கி  விளையாட்டுக்கழகம் மற்றும்  கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழகம் என்பன மோதின.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  மட்டக்களப்பு லக்கி  விளையாட்டுக்கழகம் 23 ஓவர்களை எதிர்கொண்டு 94 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழக்க, பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழகம் 17 ஓவர்களில் 6  விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து, 100  ஓட்டங்களைப்பெற்று 4  விக்கட்டுக்களினால் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவானது.

இப்போட்டியின் போது  மட்டக்களப்பு  மாவட்ட கிறிக்கெட் பயிற்றுவிப்பாளர் காப்ளீன் அன்வர்தீன் அவர்கள் அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன், கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழகம்  சார்பில் பந்து வீச்சில் 4 விக்கட்டுக்களைக் கைப்பற்றி சிறப்பாட்டக்காரராக தெரிவாகிய தணுவிற்கு நினைவுப்படிகத்தையும் வழங்கி வைத்தார்.

இத்தொடரின் போது 3 தடவைகள் சிறப்பாட்டக்கார் விருதினை தணு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.1 (1) 1 (2) 1 (6)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*