சந்திரானி பண்டார பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்-நாமல் ராஜபக்ஸ

0
331

IMG_2096இவ்வரசு வழங்கிய தொழில் எண்ணிக்கை மத்திய வங்கி அறிக்கையில் பதியப்படாததேன் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் கருத்துத்தெரிவிக்கையில் மேலும் குறிப்பிட்டதாவது,

நாம் எமது ஆட்சிக்காலத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்குவதில் அதிகம் கவனஞ்செலுத்தியிருந்தோம். ஒரு அரசு வழங்கும் தொழில் எண்ணிக்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்படும். கடந்த கால அறிக்கைகளை அவதானித்த போது, 2015ம் ஆண்டை விட 2016ம் ஆண்டில் வழங்கப்பட்ட தொழில் எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வரசு என்னென்னமோ செய்து இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்கப்போகிறோம் என்றது. இப்போது பார்த்தால் இலங்கையின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது, அரச நிறுவனங்களை தனியாருக்கு வழங்குவதுமே இடம்பெற்று வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு தொழில் இல்லாமல் ஏங்கும் நிலையே ஏற்படும்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சந்திராணி பண்டார, இரண்டு வருடங்களில் 430000 தொழில்களை வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த எண்ணிக்கையை இவர் எங்கு பார்த்துக்கூறுகிறார் என்று விளங்கவில்லை. சில வேளை பிரதமரின் பொக்ஸ்வோகன் கம்பனியில் இந்த தொழில் வழங்கப்பட்டிருக்கலாம்.
இப்படியான தொகை இலங்கையின் மத்திய வங்கி அறிக்கை குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இது தொடர்பில் நான் பகிரங்க தொலைக்காட்சி விவாதமொன்றிலும் கேள்வி எழுப்பியிருந்தேன். எனது கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

இவ்வரசின் காலத்தில் 430 000 தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால், இலங்கை இளைஞர், யுவதிகள் ஓரளவு தன்னிறைவடைந்திருப்பார்கள். அப்படி சிறிதேனும் இடம்பெற்றதான சான்றுகளில்லை. அமைச்சர் சஜித் பிரேமதாச உயரமானவர்களுக்கு காவலர் தொழிலும் குட்டையானவர்களுக்கு லேபர் தொழிலும் வழங்கியிருந்தார். இதனை தான் இவர்கள் தங்களது தொழில் புரட்சியாகக் கருதுகிறார்களோ தெரியவில்லை. இவ்வாறான தொழில்களைத்தான் இவ்வரசு தொழில் புரட்சியாகக் கருதியிருந்தால் இவ்வரசு வெட்கிக்க வேண்டும்.

இவ்வரசு முறையான திட்டங்களை வகுத்து இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்க முன்வர வேண்டும். அதனை விடுத்து இவ்வாறான போலியான செய்திகளை பரப்பி இலங்கை மக்களை மீண்டும் முட்டாளாக்க முனைய வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here