காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாட்டில் வெற்றிகரமாக இடம்பெற்ற கிழக்கிழங்கை ஊடக உறவுகளின் ஒன்றுகூடல் (வீடியோ)

0
178

கவர் போட்டோஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
முழு நிலவில் கிழக்கு ஊடக உறவுகளின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் 2017 எனும் தலைப்பில் நேற்று 04.09.2017ம் திகதி திங்கட்கிழமை காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடு செய்திருந்த கிழக்கு ஊடக உறவுகளின் நிகழ்வானது, காத்தான்குடியில் வெற்றிகரமாகவும் ஊடக அமைப்புக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் அமைந்திருந்தனை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

முக்கிய பிரமுகர்களாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத், மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாரூக், சுபைர் ஆகியோருடன் கிழக்கு மாகாணம் தழுவிய கல்விமான்கள், மார்க்க அறிஞர்கள், வளர்ந்து வரும் ஊடகவியலாளர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப்பலரும் பிரசன்னமாயிருந்தமை குறித்த கிழக்கு ஊடகவியலாளர்களின் ஒன்று கூடலுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.

இராப்போசன விருந்துபசாரத்துடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வானது, மாலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி அதிகாலை 4 மணி வரையும் இடம்பெற்றதோடு, இரு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டு கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், கெளரவிப்பு நிகழ்வு, மியன்மார்-ரோஹிங்கிய முஸ்லிம்களின் படுகொலைக்கெதிராக கையொப்பமிடல் போன்ற சிறப்பு நிகழ்வுகளுடன் இனிதே நிறைவடைந்தது.

குறித்த ஊடக உறவுகளின் நிகழ்விற்கு முன்னாள் கல்குடாத்தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் தற்போதைய நாபீர் பெளண்டேசனின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரியுமான சாட்டோ வை.எல்.மன்சூர் முக்கிய அனுசரனையினை வழங்கியிருந்தமையும் முக்கிய விடயமாகும்.

நிகழ்வின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ ஒன்று கூடலின் காணொளி:-
www.youtube.com/watch?v=AKPDWIO9kPo&feature=youtu.be

a b கவர் போட்டோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here