எமது நாட்டின் கிரிக்கெட் போட்டிகளைக்காண இந்தியக் கம்பனிகளுக்குப்பணம் செலுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை-டி.வி.சாணக எம்பி

0
233

IMG_2133இலங்கையில் கிரிக்கட் நடாத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக்கூட இந்திய நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதைப் பார்க்கும் போது, இவ்வாட்சி நீடித்தால் முழு இலங்கையையும் இந்தியாவுக்கு தாரை வார்த்து விடுவார்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லையென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சாணக தெரிவித்தார்.

தங்கல்லையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில்,

சில விடயங்கள் இலங்கை நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியின்மையால் வெளிநாடுகளின் உதவிகள் பெறப்படும். எமது ஆட்சிக்காலத்திலும் பல விடயங்களுக்கு வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்றுள்ளோம். அது தவிர்க்க முடியாது. அது மாத்திரமன்றி, அனைத்து நாடுகளுடனும் புரிந்துணர்வுடன் பயணித்தால் தான் எமது நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல முடியும். இவைகளெல்லாம் மறுக்க முடியாத விடயங்கள்.

இருந்த போதிலும், இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது மிகத்தந்திரமாகச் செயற்பட வேண்டும். எமது நாடு அடிமைப்படாத வகையிலும் நாட்டின் வருமானங்கள் வெளியில் செல்லாத வகையிலான திட்டங்கள் அவசியமாகும். தற்போதைய இவ்விடயங்களின் போது எதனையும் சிந்திக்காது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இலங்கை கிரிக்கட் விளையாட்டின் போது அனுமதிச்சீட்டுக்கள் வழங்குவது ஒரு இலங்கை கிரிக்கட் நிறுவனத்துக்கு வழங்கப்படும்.. தற்போது அது பிக் மை சோவ் என்ற இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 100 ரூபாய், 1000 ரூபாய், 1500 ரூபாய் அனுமதி சீட்டுக்கள் முறையே 300 ரூபாய், 2000 ரூபாய், 3000 ரூபாய்க்கு விற்கப்படுவனைச் செய்கிறார்கள்.

நாம் எமது நாடு விளையாடும் போட்டிகளைக்காண இந்தியக்கம்பனிக்கு பணஞ்செலுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது. இந்த சிறிய விடயத்தை இலங்கை நிறுவனங்களால் செய்ய முடியாதா? இந்த வருமானங்கள் கூட இந்தியாவுக்குத்தான் செல்ல வேண்டுமா? அனுமதிச்சீட்டுக்களின் விலையை அதிகரிக்கின்ற போது, இலங்கை மக்களின் கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் குறைந்து விடலாம். இதன் மூலம் இலங்கை கிரிக்கெட்டை மறைமுகமாக வீழ்த்தும் தந்திரமுமிருக்கலாம்.

இலங்கையைப் பொறுத்த மட்டில் கிரிக்கெட் இலாபத்தை நோக்காகக் கொண்டதல்ல. இலங்கையின் கௌரவத்தையே பாதுகாக்கும் ஒன்றாகும். இவற்றின் காரணமாகவே இலங்கை கிரிக்கெட் இத்தனை வீழ்ச்சியுற்றுள்ளது. இவ்வரசானது நாட்டு மக்களின் முக்கியத்துவத்தை அறிந்து தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here