ஞானசார தேரர் நீதிமன்றுக்கு அறிவிக்காமல் ஜப்பான் செல்ல நான் அனுமதி வழங்கவில்லை-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கிண்டல்

0
149

IMG_2144ஞானசார தேரர் நீதிமன்றுக்கு அறிவிக்காமல் ஜப்பான் செல்ல நான் அனுமதி வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கிண்டலாகக் குறிப்பிட்டார்.

கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை, திருக்கோவில் மற்றும் எரக்கமனைச்சேர்ந்த முஸ்லிம் தலைவர்களின் குழு தங்காலை கார்ல்டன் இல்லத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தது. இதன் போது அங்கு சில முஸ்லிம் பிரமுகர்களிடம் நட்பு ரீதியாக உரையாடும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

தான் ஒரு போதும் ஞானசார தேரரைப் பாதுகாக்கவில்லையெனவும், அவரைத்தன்னுடைய அரசில் பாதுகாத்தவர்கள் இந்த அரசாங்கத்தில் பலம் பொருந்தியவர்களாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், நான்கு பொலிஸ் குழுக்கள் தேடப்பட்ட ஞானசார தேரருக்கு தான் பிணை வழங்க பணிக்கவில்லையெனவும் அவர் நீதிமன்றுக்கு அறிவிக்காமல் ஜப்பான் செல்ல நான் அனுமதி வழங்கவில்லையெனவும் அவர் கிண்டலாகக்குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திணநாயகம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது, அம்பாறை மாவட்ட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here