வாழை..நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கல்குடா பிரிமியர் லீக் சுற்றுப்போட்டியில் ஓட்டமாவடி வளர்பிறை சம்பியனாகத் தெரிவு.

0
373

(ஜே.எம்.இம்தியாஸ்)

55496a28-d24c-4f71-a94c-4a3fc41a771dவாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் சுமார் ஆறு வருடகாலமாக நடாத்தி வருகின்ற கல்குடா பிரிமியர் லீக் சுற்றுப் போட்டியின் தொடர் இம்முறையும் ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் 24 அணிகளின் பங்குபற்றுதலுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

குறித்த சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (05) ம் திகதி செவ்வாய்க்கிழமை அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இதில் ஓட்டமாவடி வளர்பிறை மற்றும் மாவடிச்சேனை அல் இக்ரா ஆகிய அணிகள் பங்குபற்றியது. இறுதிப் போட்டியில் ஓட்டமாவடி வளர்பிறை அணியினர் 2வது தடவையாகவும் KPL  வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனுக்கான விருதினை ஆர். சாஜஹாத் பெற்றுக்கொண்டதோடு இச் சுற்றுத் தொடரின் அதிக 6 ஓட்டத்தினை பெற்ற துடுப்பாட்ட வீரருக்கான விருதினை சீ.எம்.எம். சப்ரி பெற்றுக்கொண்டார்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் கலந்துகொண்டு அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.5abebc3d-017d-4017-93bd-c0ae58cb3b39 42449a3d-0094-48af-a08b-ed77f04914c3 b821d17d-7ee3-4620-b2ae-35426103e71f f3c8aaf6-58b4-42ca-a75c-8de99b9f2952

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here