நபவியின் தேசியப்பட்டியல் குருநாகலுக்கு வழங்கப்பட வேண்டும்- அபூதாஹிர் எம். இர்பான்

0
249

2017-09-04-PHOTO-00000004இக்பால் அலி

குருநாகல் மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் பாராளுமன்றப் பிரநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்பது இன்றைய சூழலில் முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரையிலும் முக்கியமானதும் அவசியமானதுமாகும்.  சமூகத்திற்கான அரசியலா? அல்லது கட்சிக்கான அரசியலா? என்ற விடயத்தில் அப்பழுக்கற்ற சிந்தனையுடன் செயற்படக்கூடியவர் அ .இ.ம. காங்கரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள்.

குருநாகல் மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்திய அதிகாரி சாபி சஹாப்தீனுக்கு வழங்க வேண்டுமென கோரிக்கைவிடுப்பதாக குருநாகல் தோரயாய இளைஞர் சங்கத்தின் தலைவர் அபூதாஹிர் எம். இர்பான் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நவவி அவர்களுடைய இரு வருட கால எல்லை முடிவடைந்ததோடு, அடுத்ததாக குருநாகல் மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை குருநாகல் தோரயாய இளைஞர் சங்கத்தின் தலைவர் அபூதாஹிர் எம். இர்பான் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தில்  இவ்வாறு இதனைத்தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில்,

கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வைத்தி அதிகாரி சாபி அவர்கள் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றவர். அகில இலங்கை மக்கள் கட்சி சார்பாக ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட எந்தவொரு வேட்பாளர்களும் இத்தகையதொரு கணிசமாளவு வாக்குத் தொகையைப் பெற்றுக்கொள்ளவில்லை.

இத்தகைய வாக்குப்பலமிக்க ஒருவருக்கு கட்சியினர் முக்கியத்துவமளிக்க வேண்டும். அதிலும் நீண்ட காலமாக ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத இடத்திற்கு வழங்குவதென்பது இன்றியமையாத செயற்பாடாகும். ஏனெனில், முஸ்லிம் சமூகத்தின் தேவை குறித்துப்பேசுவதற்கும் குரல் கொடுப்பதற்கு மட்டுன்றி, முஸ்லிம் சமூகத்தினுடைய இருப்பின் அடையாளமாகவும் கல்வி, பொருளாதார மேம்பாட்டின் காரணியாகவும் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கின்றன.

பாராளுமன்றத்தேவையென்பது பதவியென்பதற்கு மாறாக, அதிகாரமிக்க மக்கள் சேவையாகும். ஆகவே, மக்களுடைய தேவைகளை நிறைவு செய்வதற்கான பல்வகைப்பட்ட பொறிமுறைகளில் சிறப்பான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. இப்பதவி கிடைக்கும் பட்சத்தில் வைத்திய அதிகாரி கச்சிதமாகச் செய்யக்கூடியவர்.

அதைச்திறன்படச் செய்வதற்கான அறிவுத்திறன் மட்டுமல்ல. சமூக அக்கறையும் அவரிடமிருக்கின்றது. இப்படியான ஒருவருக்கு வழங்கும் பட்சத்தில் இரட்டிப்பான செயற்பாடும் பங்களிப்பும் குருநாகல் மாவட்டத்தில் நடந்தேறும்.

ஆனாலும், இப்பதவி தேசியப்பட்டியல் அல்லாமல் கிடைக்கயிருந்தது.  மாறாக, அது துரதிர்ஷ்டவசமாக மயிரிழையில் கிடைக்காமற் போயிற்று என்றே கூற வேண்டும்.

 எனவே, இதனால் நாங்கள் அரசியல் முகவரியற்றவர்ளாக இருக்கின்றோம். எனவே, எமது பிரதேசத்தின் காலத்தின் தேவை உணர்ந்து பாராளுமன்றப்பிரதிநித்துவத்தை எமது குருநாகல் மாவட்டத்திற்கு தந்துதவ வேண்டுமென்று எமது அமைப்பினூடாக கோரிக்கை முன் வைக்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here