பொறியியலாளர் ஷிப்லி பாறுகின் முயற்சியில் காத்தான்குடி தெற்கு எல்லை வீதி காபட் வீதியாகப் புனரமைப்பு

0
177

DSC_0226எம்.ரீ.ஹைதர் அலி
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் முயற்சியின் பயனாக கிழக்கு மாகாண சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் முற்று முழுதாக காபெட் வீதியாக புனரமைப்புச் செய்யப்படவிருக்கும் காத்தான்குடி தெற்கு எல்லை வீதிக்கான அடிக்கல் நடும் வைபவம் 2017.09.06ஆந்திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ அல்ஹாஜ் ZA. நசீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும் கலந்து கொண்டு இவ்வீதிப் புனரமைப்புக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. சித்திரவேல், காத்தான்குடி நகர சபையின் செயலாளர் SMM.ஸபி, காத்தான்குடி நகர சபையின் முன்னாள் முதல்வர் மர்சூக் அஹமட் லெப்பை, காத்தான்குடி இளைஞர் காங்கிரஸ் தலைவர் இல்மி அஹமட் லெப்பை மற்றும் முக்கிய ஊர்ப்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி, ஆரயம்பதி நகரங்களுக்கான எல்லையான இவ்வீதி தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான வீதிகளிலொன்றாகும்.

இவ்வீதி மிக நீண்ட காலமாகப் புனரமைப்புச் செய்யப்படாமல் குன்றும் குழியுமாகக் காணப்பட்டமையினால் இவ்வீதியினைப் பயன்படுத்தும் மக்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

பொது மக்களின் நன்மைகருதி இவ்வீதியினைப் புனரமைப்புச் செய்து வழங்க வேண்டுமென்ற நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக, கிழக்கு மாகாண சபையின் சுமார் 85 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் தற்போது முற்றுமுழுதாக காபட் வீதியாகப் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.

இதன் மூலம் காத்தான்குடி, ஆரயம்பதி நகரங்களை அடுத்துள்ள ஏனைய பிரதேசங்களுக்கான போக்குவரத்து மேலும் இலகுபடுத்தப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. DSC_0218 DSC_0226 DSC_0232 DSC_0236 DSC_0244 DSC_0250 DSC_0255 DSC_0260 DSC_0263

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here