பொலன்னறுவை தேர்தல் தொகுதியின் புதிய அமைப்பாளராக பக்கீர் முஹைதீன் சாஹுல் ஹமீத் (கடாபி) ஜனாதிபதியால் நியமனம்

0
290

WhatsApp Image 2017-09-06 at 9.28.04 PMஆரிப் எஸ்.ஆரிப்

பொலன்னறுவை மாவட்டத்தின் பொலன்னறுவை தேர்தல் தொகுதியின் புதிய அமைப்பாளராக பக்கீர் முஹைதீன் சாஹுல் ஹமீத் (கடாபி) அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர், பிரபல இளந்தொழிலதிபருமாவார். இளம் வயதில் பொறுப்பான பதவிக்கு நியமிக்கப்படுள்ள இவர் மூலம் இப்பிரதேசத்தின் பல்வேறு தேவைப்பாடுகள் நிறைவு பெறுமென இப்பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பொலன்னறுவை மாவட்டத்தின் கல்வி, பாதை மற்று உட்கட்டமைப்பு வசதிகள் மேன்படுத்தத் தேவையான சகல முயற்சிகளையும் மேற்கொள்வதும், அசர தொழில்வாய்ப்புக்களைக் பெற்றுக்கொடுப்பதே தனது ஒரே குறிக்கோளாகுமென தெரிவிக்கின்றார் புதிய அமைப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ள பக்கீர் முஹைதீன் சாஹுல் ஹமீத் (கடாபி).

இன்றைய ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனவின் ஆரம்ப கால அரசியல் செயற்பாடுகளுக்கு பக்கபலமாக இருந்து தோள் கொடுத்த, மைத்திரி மகே இஸ்மாயில் சகோதரயா என புகழாரம் சூட்டிய தமன்கடுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மர்ஹூம் A.S.M.இஸ்மாயில் எதிர் வீட்டுக்காரரான இவர், அவரை முன்மாதிரியாகக் கொண்டு ஜனாதிபதி, மற்றும் அரசியல் தலைவர்களின் ஆதரவுடனும் அவர் போன்ற தைரியம், சமூகப்பற்றும் ஒருங்கிணைந்து செயலாற்றுவார் என எதிர்பார்க்கிறோம்.

ஆகவே, இப்பதவி மூலம் மர்ஹூம் இஸ்மாயில் எவற்றையெல்லாம் தனது சமூகத்துக்கும் இப்பிரதேசத்துக்கும் முன்னேடுத்தாரோ அதையும் தாண்டி பக்கீர் முஹைதீன் சாஹுல் ஹமீத் (கடாபி) முன்னெடுக்க வேண்டுமென்பதுடன், செய்யத்தவறியவற்றையும் முன்னெடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.இப்பிரதேச சிறுபான்மை முஸ்லிம்களைக் கெளரவப்படுத்துமுகமாக இந்நியமனத்தை வழங்கிய அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை இப்பிரதேச மக்கள் தெரிவித்துக்கொள்வதுடன், இவரது சேவை தொடர எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.WhatsApp Image 2017-09-06 at 9.28.04 PM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here