மனித மாமிசம் உண்ணும் அரக்கர்களின் தலைவி ஆன் சான் சூகி: பெண் இனத்திற்கே சாபக்கேடு

0
298

WhatsApp Image 2017-09-07 at 3.06.04 AMஆரிப் எஸ்.நளீம்

நான் பெண்களை உயர்வாகக் கருதி நேசிப்பவன். ஆனாலும், இவளை வெறுக்கிறேன்.

எனக்கு சிறுவயது முதல் உலக அரசியல் விவகாரங்கள் பற்றி அறிந்து கொள்வதில் அதீத ஈடுபாடிருந்து வந்தது. அக்காலப்பகுதியில் மியன்மார் இராணுவத்தினரால் சூகியின் கணவன் கொல்லப்படுகிறான். அவள் வீட்டுக்காவலில் வைக்கப்படுட்டு வெளியுலகத் தொடர்புகளிலிருந்து இருபது ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்படுகிறாள். எனக்கு 90 களில் அவள் ஒரு சினிமாவில் தோன்றும் ஹீரோயினை போலவே தெரிந்தால்.

இவளை ஒரு சமாதான விரும்பி. ஜனநாயகவாதி என உலகம் அழைத்தது. நோபல் பரிசு கொடுத்து அழகு பார்த்தது. ஒரு தொலைக்காட்சி அலைவரிசை பத்தாண்டுகளுக்கு முன் இவளின் புகழ் பாடி மெச்சிப் பேசியது பற்றி இன்று நினைக்கிற போது, அருவெறுப்பாக இருக்கிறது.

நான் பெண்களை நேசிப்பவன். ஆனாலும், இன்று இவளை அடியோடு வெறுக்கிறேன்.

இஸ்லாமியர்களை யாரெல்லாம் எதிரிகளாக நினைக்கிறார்களோ, அவர்களெல்லாம் தேசம் கடந்து மொழி, நிறம் கடந்து கை கோர்க்கிறார்கள். இஸ்லாமிய உலகமோ பிரிந்து சரிந்து போகிறது. உலகில் மாற்று மதத்தினரை பெரும்பான்மையினராகவும் இஸ்லாமியர்களைச் சிறுபான்மையினராகவும் கொண்ட முஸ்லிம் உம்மாவின் பிரச்சனைகளை அது ஒரு உள்நாட்டுப் பிரச்சனையாகவே பார்க்கிறது.

இந்த செல்வ அதிகார ஆயுத வளமிக்க இஸ்லாமிய நாடுகள் அது விடயமாக கிஞ்சித்தாகினும் கரிசனை எடுத்துக்கொள்வதில்லை. அது பற்றி வாய் திறக்கவும் மறுத்து விடுகிறது.

உலகில் ஒரு மூலையில் வாழும் ஒரு முஸ்லிம் உங்களின் உடன் பிறப்பு மட்டுமல்லாது, உங்களின் உடற்பாகத்தின் ஓர் உறுப்பைப் போலாவான். அவன் துன்பப்படுவானானால் அவனின் வலியை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் எனும் சாந்தி மார்க்கத்தில் மொழி நிற வேறுபாடுகள் கிடையவே கிடையாது. யாராவது மொழி நிற வேறுபாடுகள் பாப்ர்பார்களானால் அவர்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) மறுத்து விட்டார்கள்.

இஸ்லாத்தில் வெள்ளைத் தோலுக்கும் கறுப்புத்தோலுக்கும் வேறுபாடுகளில்லை. இறை விசுவாசி எனும் அடிப்படையில் இவர்கள் இருவரும் சமம் என்றார்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here