முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர் ஏ. காதிர் இராஜினாமா: புதிய செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர்

0
240

21317481_2366245030268375_3246889623007545049_nநன்றி- சபீக் ஹுசைன்
கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச்செயலாளருமான நிஸாம் காரியப்பர் நேற்று முதல் (07) முஸ்லிம் காங்கிரஸின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செயலாளர் பதவியிலிருந்த தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மன்சூர் ஏ. காதிர் தனது பதவியை இராஜினாமாச் செய்த பின்னரே, இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் தற்போது பிரதிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் புதிய செயலாளர் நிஸாம் காரியப்பரும், பிரதிச்செயலாளர் மன்சூர் ஏ. காதிரும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெற்றிப்பாதையில் வழிநடாத்துவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.

இதுவரை காலமும் செயலாளராகக் கடமையாற்றி, எனக்கு பக்கபலமாகச் செயற்பட்ட மன்சூர் ஏ. காதிருக்கு என் ஆழ்மனதிலிருந்து நன்றிகளைத் தெரிவிப்பதுடன், உதவிச் செயலாளராகச் செயலாற்ற முன்வந்த அவரின் பெருந்தன்மையையும் பாராட்டுகிறேன் என புதிய செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். 21317481_2366245030268375_3246889623007545049_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here